முதுமொழிக்காஞ்சி-திரிகடுகம்-இனியவை நாற்பது
முதுமொழிக்காஞ்சி-திரிகடுகம்-இனியவை நாற்பது
முதுமொழிக்காஞ்சி
1. சிறந்த பத்து இடம் பெற்ற நூல் எது?
விடை: முதுமொழிக்காஞ்சி
2. “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்” – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: முதுமொழிக்காஞ்சி
3. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?
விடை: மதுரை கூடலூர் கிழார்
4. முதுமொழிக்காஞ்சியின் வேறு பெயர் யாது?
விடை: அறவுறைக் கோவை
5. முதுமொழிக்காஞ்சியின் துறை யாது?
விடை: காஞ்சி திணை துறை
6. முதுமொழிக்காஞ்சி கூறும் சிறந்த வாழ்வு எது?
விடை: இளமையைக் காட்டிலும் நோயற்ற வாழ்வு
7. முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரம் எத்தனை?
விடை: 10
8. முதுமொழிக்காஞ்சி எத்தனை பாடல்களால் ஆனது?
விடை: 100 பாடல்கள்
9. “காதிலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்” என்ற வரி இடம் பற்ற நூல் எது?
விடை: முதுமொழிக் காஞ்சி
10. ஆர்கலி என்பதன் பொருள் என்ன?
விடை: நிறைந்த ஓசையுடைய கடல்
11. மதுரை கூடலூர் கிழார் வாழ்ந்த காலம் என்ன?
விடை: சங்க காலத்திற்குப் பின்
12. முதுமொழிக்காஞ்சி எந்த வகை நூலாகும்?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்
13. கற்றலை விட எது சிறந்தது என முதுமொழிக்காஞ்சி கூறுகிறது?
விடை: ஒழுக்கமுடைமை
14. உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்துக் கூறும் நூல் எது?
விடை: முதுமொழிக்காஞ்சி
15. முதுமொழிக்காஞ்சி கற்பதன் பயன் என்ன?
விடை: குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறி நல்வழிப்படுத்துகிறது
16. முதுமொழிக்காஞ்சி பாடல்களை மேற்கோளாக கையாண்டவர்கள் யார்?
விடை: நச்சினார்க்கினியர்
திரிகடுகம்
17. “உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்” – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: திரிகடுகம்
18. திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?
விடை: நல்லாதனார்
19. நல்லாதனார் பிறந்த ஊர் எது?
விடை: திருத்து (திருநெல்வேலி)
20. மருந்துப் பெயரால் ஆன நூல் எது?
விடை: திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி)
21. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை உடையது?
விடை: 100
22. நல்லாதனாரின் சிறப்புப் பெயர் யாது?
விடை: செருஅடுதோள் நல்லாதன்
23. நல்லாதனைச் "செருஅடுதோள் நல்லாதன்" என்று குறிப்பிடும் நூல் எது?
விடை: பாயிரம்
24. திரிகடுகம் எந்த வகை நூல்களில் ஒன்று?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு
25. திரிகடுகப் பாடல்களில் எத்தனை அறக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன?
விடை: மூன்று
26. பால்பற்றி என்பதன் பொருள் என்ன?
விடை: ஒரு பக்கச் சார்பு
27. “நன்றறியும் மாந்தர்க் குள” என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: திரிகடுகம்
28. “தூற்றின்கண் தூவிய வித்து” என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: திரிகடுகம்
29. தூறு என்பதன் பொருள் என்ன?
விடை: புதர்
30. வித்து என்பதன் பொருள் என்ன?
விடை: விதை
31. “நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்” இவ்வடியில் வழி என்னும் பொருள் தரும் சொல் என்ன?
விடை: நெறி
இனியவை நாற்பது
32. இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்?
விடை: பூதஞ்சேந்தனார்
33. “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” என்ற வரியைக் கூறியவர் யார்?
விடை: பூதஞ்சேந்தனார்
34. சலவர் என்பதன் பொருள் என்ன?
விடை: வஞ்சகர்
35. மதுரைத் தமிழாசிரியர் மகன் யார்?
விடை: பூதஞ்சேந்தனார்
36. பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது?
விடை: மதுரை
37. பூதஞ்சேந்தனார் காலம் என்ன?
விடை: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
38. “மலர்தலை ஞாலத்து மன்னுயிர்கெல்லாம்” என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: இனியவை நாற்பது
39. இனியவை நாற்பது எந்த வகை நூல்களில் ஒன்று?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு
40. நன்மை தரும் எத்தனை பாடல்களை இனியவை நாற்பது கொண்டுள்ளது?
விடை: நாற்பது
41. இனியவை நாற்பதின் ஓவ்வொரு பாடலும் எத்தனை அறக்கருத்துகளைக் கூறும்?
விடை: மூன்று அல்லது நான்கு
42. குழவி என்பதன் பொருள் என்ன?
விடை: குழந்தை
43. மயரி எனபதன் பொருள் என்ன?
விடை: மயக்கம்
Comments
Post a Comment