தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - வீரமாமுனிவர்
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - வீரமாமுனிவர்
1) திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் யார்?
விடை: வீரமாமுனிவர்
2) தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி எது?
விடை: சதுரகராதி (வீரமாமுனிவர், 1732)
3) "சதுர்" என்பதன் பொருள் யாது?
விடை: நான்கு (பெயர், பொருள், தொகை, தொடை)
4) வீரமாமுனிவர் இயற்பெயர் மற்றும் பிறந்த நாடு எது?
விடை: கான்ஸ்டான்டின் ஜோசேப் பெஸ்கி (இத்தாலி நாடு)
5) வீரமாமுனிவர் அறிந்த மொழிகள் யாவை?
விடை: இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
6) வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?
விடை: மதுரை சுப்ரதீபக் கவிராயர்
7) "தேம்பாவணி" என்பதன் பொருள் என்ன?
விடை: வாடாத மாலை (தேம்பா + அணி) அல்லது தேன் போன்ற பாடல்களின் மாலை.
8) கிருத்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எது?
விடை: தேம்பாவணி
9) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?
விடை: சூசை மாமுனிவர் (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)
10) வீரமாமுனிவர் தமிழகம் வந்த ஆண்டு மற்றும் வயது?
விடை: 1710-ல் தனது 30-வது வயதில் வந்தார்.
11) வீரமாமுனிவர் தன் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?
விடை: தைரியநாத சாமி (பின்னர் வீரமாமுனிவர் எனத் தனித்தமிழில் மாற்றினார்).
12) வீரமாமுனிவரின் காலம் என்ன?
விடை: 1680 - 1747
13) தமிழ் உரைநடையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
விடை: வீரமாமுனிவர் (கவிதை வடிவில் இருந்தவற்றை உரைநடையாக மாற்றினார்).
14) வீரமாமுனிவர் மறைந்த இடம் எது?
விடை: அம்பலக்காடு (கொச்சி, கேரளா)
15) வீரமாமுனிவர் இயற்றிய பிற நூல்கள் யாவை?
நூல்கள்: ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, திருகாவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
16) வீரமாமுனிவர் வெளியிட்ட அகராதிகள் யாவை?
விடை: தமிழ்-இலத்தீன், இலத்தீன்-தமிழ், தமிழ்-பிரெஞ்சு, போர்த்துக்கீசிய-இலத்தீன் தமிழ் அகராதிகள்.
17) வீரமாமுனிவரின் பெற்றோர் யாவர்?
விடை: கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
18) வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல் எது?
விடை: தொன்னூல் விளக்கம்
Comments
Post a Comment