தமிழின் தொன்மை & சிறப்புகள் - PART-9
தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 9
12-ம் வகுப்பு: இலக்கியத்தில் மேலாண்மை (1-33)
1) மனிதனால் ஓய்வு நேரத்தை எவ்வாறு பெறமுடிந்தது?
விடை: பணிகளை எளிதாக்க விரைவான கருவிகளைக் கண்டுபிடித்ததால்
2) ஓய்வு நேரத்தின் பயன் யாது?
விடை: சிந்திக்க மற்றும் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள (நேர மேலாண்மை)
3) "ஏற்ற காலத்தை அறிந்தால் ____ அடையலாம்"
விடை: உலகம்
4) ஒரு அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதை வள்ளுவர் எங்கு கூறியுள்ளார்?
விடை: மடியின்மை அதிகாரம்
5) "பலர் துஞ்சவும் தான் துஞ்சான்" என்ற வரி யாரைக் குறிக்கிறது?
விடை: சோழன் நலங்கிள்ளி (புறநானூறு - கோவூர்க்கிழார்)
6) நேர மேலாண்மைக்கு ஆசிரியர் கூறும் நீச்சல் வீரர் கதை எந்த நாட்டைச் சார்ந்தது?
விடை: சீனா
7) வேளாண்மைக்கு உரிய மேலாண்மை கூறுகள் யாவை?
விடை: சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மை, அறுவடைப் பாதுகாப்பு, இருப்பு வைத்தல்
8) வறியவன் வயலைப் பாதுகாப்பது போல் உலகைப் பாதுகாத்த மன்னன் யார்? (கம்பர் கூற்று)
விடை: தசரதன்
9) "மனமே ஒரு வேளாண்மை" எனக் கூறும் அறநெறிச் சார வரி யாது?
விடை: "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக"
10) தமிழருக்கு ஒரு காலத்தில் கடல் ____ போல் எளிதாக இருந்தது.
விடை: ஏரியைப்
11) கடலைக் குறிக்கும் வேறு பெயர்கள் சில கூறுக?
விடை: அரலை, ஆர்கலி, ஆழி, அழுவம், உவரி, திரை, பௌவம், முந்நீர்...
12) ரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் படையில் இருந்ததாகக் கூறும் நூல்?
விடை: சிலப்பதிகாரம்
13) குதிரைகள் இறக்குமதி பற்றிக் கூறும் பட்டினப்பாலையின் வரி என்ன?
விடை: "நீரின் வந்த நிமிர்ப்பரி புரவியும்"
14) ஏற்றுமதி இறக்குமதி சிறப்பாக நடந்த காவிரிப்பூம்பட்டினத் துறைமுகம் பற்றி கூறும் நூல்?
விடை: பட்டினப்பாலை
15) முசிறி துறைமுகம் சிறந்ததாக இருந்ததை எதன் மூலம் அறியலாம்?
விடை: சங்க இலக்கியங்கள்
16) யவனர்கள் கப்பலை எங்கு நிறுத்தினர்?
விடை: முசிறித் துறைமுகம்
17) பாண்டிய தூதுக்குழு அகஸ்டஸ் சீசரை சந்தித்ததாகக் கூறியவர் யார்?
விடை: ஸ்ட்ரேபோ
18) யவனர்கள் கப்பல் பற்றிய குறிப்பு எந்த புறநானூற்றுப் பாடலில் உள்ளது?
விடை: 56-ஆம் பாடல்
19) யவனர்களை அரண்மனைத் தொழிலாளி ஆக்கியவன் யார்?
விடை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பதிற்றுப்பத்து)
20) யார் திறமைசாலிகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்?
விடை: உயர் பதவியில் இருப்பவர்கள்
21) தெரிந்திருப்பது ஒருவகை அறிவு; யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது?
விடை: மற்றோர் அறிவு (நிருவாக மேலாண்மை)
22) "கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்" - நூல் எது?
விடை: நாலடியார்
23) நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் நாடகம் எது?
விடை: டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்
24) "ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து..." - வரிகளுக்குச் சொந்தக்காரர்?
விடை: ஒளவையார்
25) 126 ஒற்றை வரிகளில் எழுதப்பட்ட நூல் எது?
விடை: துளிகள்
26) "துளிகள்" நூலை இயற்றியவர் யார்?
விடை: ஹிராக்ளிடஸ் (கிரேக்கம்)
27) "இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது" - கூறியவர்?
விடை: ஹிராக்ளிடஸ்
28) "இலக்கியத்தில் மேலாண்மை" நூலின் ஆசிரியர் யார்?
விடை: வெ.இறையன்பு
29) இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கு தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தவர்?
விடை: வெ.இறையன்பு
30) வெ.இறையன்பு எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?
விடை: 1990 ஆம் ஆண்டு முதல்
31) வெ.இறையன்பு எழுதிய நூல்கள் சில கூறுக?
விடை: வாய்க்கால் மீன்கள், ஏழாவது அறிவு, மூளைக்குள் சுற்றுலா
32) தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்ற இறையன்புவின் நூல் எது?
விடை: வாய்க்கால் மீன்கள் (1995)
33) இறையன்பு எழுதும் இலக்கியத் தளங்கள் யாவை?
விடை: சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல்
7-ம் வகுப்பு: தமிழக விளையாட்டுகள் (34-43)
34) விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
விடை: போட்டியிடுதல்
35) ஏறுதழுவுதல் எந்த நிலத்தின் வீர விளையாட்டாகும்?
விடை: முல்லை நிலம்
36) மதுரையில் யானைப்போர் காண்பதற்காக கட்டப்பட்ட இடம் எது?
விடை: தமுக்கம் மண்டபம்
37) தமுக்க மண்டபத்தை கட்டியவர் யார்?
விடை: திருமலை நாயக்கர்
38) ஆமூர் மல்லனுக்கும் நற்கில்லிக்கும் நடந்த போர் பற்றி கூறும் நூல்?
விடை: புறநானூறு
39) தமிழர்களின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று எது?
விடை: சிலம்பாட்டம்
40) கோழியூரின் பழைய பெயர் என்ன?
விடை: உறந்தையூர்
41) மகளிர் விளையாடும் சங்ககால விளையாட்டு எது?
விடை: ஓரையாடுதல்
42) சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகள் யாவை?
விடை: பம்பரம், கிட்டிபுள், கோழி, நீச்சல்
43) சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் யாவை?
விடை: பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம், ஊஞ்சல்
Comments
Post a Comment