தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 2

தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 2

தமிழ் வரிவடிவ வளர்ச்சி (1-26)
1. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்?
விடை: எழுத்து
2. பேச்சு மொழி எவ்வாறு உருவானது?
விடை: சைகை, குரல் ஒலி, சொற்கள்
3. எழுத்து வடிவ தொடக்க நிலை எது?
விடை: பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணத்தைக் குறியீடாகப் பொறித்தது
4. பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர்?
விடை: ஓவிய எழுத்து
5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைத்தனர்?
விடை: ஒலி எழுத்து நிலை
6. இன்றுள்ள எழுத்துக்கள் எவற்றின் திரிபு ஆகும்?
விடை: பொருள்களின் ஓவியமாக இருந்ததன் திரிபு
7. கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு என்ன?
விடை: ஸ என்னும் வடஎழுத்து, மெய்யைக் குறிக்க புள்ளி இல்லை, எகர-ஒகர வேறுபாடில்லை
8. எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றன?
விடை: அச்சுக்கலை தோன்றிய பின்பு
9. கல்வெட்டுக்கள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்கள் யாவை?
விடை: வட்டெழுத்து, தமிழ் எழுத்து
10. கல்வெட்டுக்கள் எந்த ஆண்டு முதல் கிடைக்கின்றன?
விடை: கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல்
11. செப்பேடுகள் எந்த ஆண்டு முதல் கிடைக்கின்றன?
விடை: கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல்
12. மிகப்பழைய தமிழ் எழுத்து எது?
விடை: வட்டெழுத்து
13. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள்?
விடை: கண்ணெழுத்துக்கள்
14. சேர, பாண்டிய மண்டலத்தில் கிடைத்த எழுத்துக்கள் யாவை?
விடை: வட்டெழுத்து
15. இராசராசன் ஆட்சிக்காலத்தில் கிடைத்த எழுத்துக்கள் யாவை?
விடை: பழைய தமிழ் எழுத்துக்கள்
16. இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்ததை உணர்த்தும் கல்வெட்டு?
விடை: அரச்சலூர் கல்வெட்டு
17. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினர்?
விடை: கற்பாறை, செப்பேடு, ஓலை
18. நேர்கோடுகள் எதில் பயன்படுத்தப்பட்டன?
விடை: கற்பாறை
19. வளைகோடுகளை எதில் பயன்படுத்தி எழுதினர்?
விடை: ஓலை
20. அழகு பெறுவதற்காக எந்தப் பகுதியில் கோடுகள் வரையப்பட்டன?
விடை: மேற்பகுதி
21. புள்ளி வைக்கும் பழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?
விடை: தொல்காப்பியர்
22. நெடில் எழுத்துக்கள் எவ்வாறு எழுதப்பட்டன?
விடை: க. = கா (புள்ளிக்கு பதில் துணைக்கால்)
23. ஐகார எழுத்துக்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?
விடை: ..க = கை
24. ஒளகார எழுத்துக்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?
விடை: கெ..= கெள
25. மகர எழுத்துக்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?
விடை: ப் (பகரம் உள்ளே புள்ளி)
26. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்தவர்?
விடை: வீரமாமுனிவர்
சொற்பூங்கா (27-53)
27. எதனால் தமிழர் கற்க முடியாத நிலை இல்லை?
விடை: தமிழ் செழுந்தமிழாகவும் உயிரோட்டமாகவும் உள்ளதால்
28. கல் தேய்வது போல சொல் தேய்வதும் இயற்கை.
விடை: உண்மை
29. தமிழில் 'சொல்' என்பதற்குப் பொருள் என்ன?
விடை: நெல்
30. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - யார் வாக்கு?
விடை: தொல்காப்பியர்
31. சொன்றி, சோறு எவ்வழியில் வந்தவை?
விடை: சொல் (நெல்)
32. மொழி என்பதற்கு _____ என்றும் பெயர்.
விடை: சொல்
33. மொழியை எவ்வாறு பிரிப்பர்?
விடை: ஒரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து மொழி, தொடர்மொழி
34. நெட்டெழுத்து ஏழே ஒரெழுத்து ஒரு மொழி என்றவர்?
விடை: தொல்காப்பியர்
35. குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர்?
விடை: தொல்காப்பியர்
36. 42 ஒரெழுத்து ஒரு மொழி உண்டு என்றவர்?
விடை: நன்னூலார்
37. நன்னூலார் கூறும் 42-ல் நெடில் மற்றும் குறில் எத்தனை?
விடை: 40 நெடில், 2 குறில் (நொ, து)
38. காட்டுப் பசுவுக்கு என்ன பெயர்?
விடை: ஆமா
39. விலங்கைக் குறிக்கும் ஒரெழுத்து ஒரு மொழி?
விடை: மா
40. ஈக என்னும் சொல்லைக் குறிக்கும் ஒரெழுத்து ஒரு மொழி?
விடை: ஈ
41. கரைந்து தேய்ந்த எழுத்துக்கள் யாவை?
விடை: ஆன்-ஆ, மான்-மா, கோன்-கோ, தேன்-தே, பேய்-பே
42. அம்பைக் குறிக்கும் ஒரெழுத்து ஒரு மொழி?
விடை: ஏ
43. 'ஏய்' என்பதன் பொருள் என்ன?
விடை: என்னோடு கூடு, பொருந்து, சேர்
44. உரிய கடமை புரிபவன் யார்?
விடை: ஏவலன்
45. அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைத்தனர்?
விடை: ஏகலைவன்
46. முள்ளம்பன்றியின் பழம்பெரும் பெயர் என்ன?
விடை: எய்ப்பன்றி
47. அம்பை எய்பவர் யார்?
விடை: எயினர் (மகளிர்: எயினியர்)
48. ஓரேழுத்து ஒரு மொழி எதைக் காட்டுகிறது?
விடை: மொழியின் பழமை, உயிரோட்டம்
49. செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர்?
விடை: இரா. இளங்குமரனார்
50. இளங்குமரனார் என்ன பணியாற்றினார்?
விடை: பள்ளி ஆசிரியர்
51. இளங்குமரனார் இயற்றிய நூல்கள்?
விடை: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
52. இளங்குமரனார் தொகுத்த நூல் எது?
விடை: தேவநேயம்
53. திருவள்ளுவர் தவச்சாலை மற்றும் பாவாணர் நூலகம் அமைத்தவர்?
விடை: இளங்குமரனார் (திருச்சி - அல்லூர்)

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY