ஒளவையார்-ONE LINER-QUIZ
ஔவையார் பற்றிய முழுமையான வினா-விடைகள்
தனிப்பாடல் - கல்விக்கு எல்லை இல்லை
1. எறும்பு தன் கையால் எண்சான் என கூறியவர் யார்?
விடை: ஒளவையார்
2. கற்றது கைம்மண்ணளவு என்ற வரியைக் கூறியவர் யார்?
விடை: ஒளவையார்
3. தனிப்பாடல் திரட்டு நூலைத் தொகுத்தவர் யார்?
விடை: சந்திரசேகர கவிராசப்பண்டிதர்
4. தனிப்பாடல் திரட்டு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
விடை: ராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமி
5. தமிழ்மொழியின் பெருமை, புலமை ஆகியவற்றை அறிய உதவும் நூல் எது?
விடை: தனிப்பாடல் திரட்டு
மூதுரை - ஒளவையார்
6. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறியவர் யார்?
விடை: ஒளவையார்
7. பிறாரால் அழிக்கவோ, கைப்பற்ற முடியாத செல்வம் எது?
விடை: கல்வி
8. மூதுரையின் ஆசிரியர் யார்?
விடை: ஒளவையார்
9. ஒளவையாரின் பிற நூல்கள் யாவை?
விடை: ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி
10. மூதுரை என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
விடை: மூத்தோர் கூறும் அறிவுரை
11. மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை: 31 பாடல்கள்
அறிவுசால் ஒளவையார் (உரைநடை)
12. எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரண்மனையிலேயே தங்கிவிட்டார்?
விடை: அதியமான்
13. அதியமான் ஒளவையாருக்கு எதை வழங்கினார்?
விடை: அரிய நெல்லிக்கனி
14. சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது என்ற வரியை பாடியது யார்?
விடை: ஒளவையார்
15. அதியமான் முகம் வாடக் காரணம் என்ன?
விடை: தொண்டைமான் படையெடுத்து வருவதை அறிந்து
16. அதியமான் போரை ஏன் விரும்பவில்லை?
விடை: நிறைய மனித இழப்புக்கள்
17. கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் யார்?
விடை: அதியமான் முன்னோர்கள்
18. தொண்டைமானிடம் பேசி போரைத் தடுத்தவர் யார்?
விடை: ஒளவையார்
19. தொண்டைமானின் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன?
விடை: புத்தம் புதியதாக, நெய் பூசப்பட்டு இருந்தது
20. அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் ஒளவையார் கூறியது என்ன?
விடை: நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும்
21. போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்?
விடை: தொண்டைமான்
புறநானூறு - ஒளவையார்
22. வாழ்வின் அணியாக விளங்குவது எது?
விடை: கல்வி
23. பாடான் திணை என்றால் என்ன?
விடை: புகழ், வலிமை, கொடை ஆகியவற்றை சிறப்பித்துக் கூறுவது
24. பரிசில் துறை என்றால் என்ன?
விடை: பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
25. வாயிலோயே என்பதன் பொருள் என்ன?
விடை: வாயில் காப்போனே
26. வள்ளியோர் என்பதன் பொருள் என்ன?
விடை: வள்ளல்கள்
27. வயங்குமொழி என்பதன் பொருள் என்ன?
விடை: விளங்கும் சொற்கள்
28. வித்தி என்பதன் பொருள் என்ன?
விடை: விதைத்து
29. உள்ளியது என்பதன் பொருள் என்ன?
விடை: நினைத்து
30. உரன் என்பதன் பொருள் என்ன?
விடை: வலிமை
31. வருந்தலை என்பதன் பொருள் என்ன?
விடை: வெறுமையான இடம்
32. காவினெம் என்பதன் பொருள் என்ன?
விடை: கட்டிக்கொள்ளுதல்
33. கலன் என்பதன் பொருள் என்ன?
விடை: யாழ்
34. கலப்பை என்பதன் பொருள் என்ன?
விடை: கருவிகளை வைக்கும் பை
35. மழு என்பதன் பொருள் என்ன?
விடை: கோடரி
36. ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினார்?
விடை: அதியமான் நெடுமான் அஞ்சி
37. புறநானூறு எந்த வகை நூல்களுல் ஒன்று?
விடை: எட்டுத்தொகை
38. புறநானூறுவின் வேறு பெயர்கள் யாவை?
விடை: புறம், புறப்பாட்டு
39. தமிழரின் நாகரிகம், பண்பாடு பற்றிக் கூறும் நூல் எது?
விடை: புறநானூறு
40. அதியமானிடம் நட்பு பாராட்டியவர் யார்?
விடை: ஒளவையார்
41. ஒளவையார் பாடிய மொத்தப் பாடல்கள் எத்தனை?
விடை: 59 பாடல்கள்
முக்கிய மேற்கோள்கள்
42. ஆழ அமுக்கி முகத்தினும் ஆல்கடல் நீர் என்ற வரியைக் கூறியவர்?
விடை: ஒளவையார்
43. ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
விடை: ஒளவையார்
44. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றவர்?
விடை: ஒளவையார்
45. மூதுரையின் ஆசிரியர் யார்?
விடை: ஒளவையார்
46. ஒளவையாரின் பிற நூல்கள்?
விடை: ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி
47. பாடுபட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் - இது யாருடைய அறிவுரை?
விடை: ஒளவையார்
48. “அணுவைத் துளைத்து” என திருக்குறளை போற்றியவர் யார்?
விடை: ஒளவையார்
49. இளமையில் கல் என்றவர் யார்?
விடை: ஒளவையார்
50. மதுரையில் யாருடைய வெண்கலச் சிலைகள் உள்ளன?
விடை: தொல்காப்பியர், ஒளவையார், கபிலர்
Comments
Post a Comment