தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாரதிதாசன் (PART-2)

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாரதிதாசன் (PART-2)

பெண் கல்வி மற்றும் குடும்ப விளக்கு
1) 'குடும்ப விளக்கு' நூலின் ஆசிரியர் யார்?
விடை: பாவேந்தர் பாரதிதாசன்
2) "கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்" என்றவர் யார்?
விடை: பாரதிதாசன்
3) 'யாண்டும்' என்பதன் பொருள் என்ன?
விடை: எப்போதும்
4) கற்ற பெண்ணின் குடும்பம் எவ்வாறு விளங்குகிறது என்று பாவேந்தர் கூறுகிறார்?
விடை: பல்கலைக்கழகம் போல்
5) குடும்ப விளக்கு நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? 'விருந்தோம்பல்' எதில் உள்ளது?
விடை: 5 பகுதிகள். விருந்தோம்பல் 2-ஆம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
6) "பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்நாட்டில் இருக்கும் வரைக்கும்..." - பாடியவர் யார்?
விடை: பாரதிதாசன்
புரட்சிக்கவி மற்றும் பிற படைப்புகள்
7) 1937-ல் வடமொழியில் உள்ள 'பில்கணீயம்' நூலைத் தழுவி பாரதிதாசன் இயற்றிய நூல் எது?
விடை: புரட்சிக்கவி
8) பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தைத் தமிழில் தந்தவர் யார்?
விடை: பாரதிதாசன்
9) பாரதிதாசன் நடத்தி வந்த இதழின் பெயர் என்ன?
விடை: குயில்
10) பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
விடை: பிசிராந்தையார்
11) பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: திருச்சி
12) புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பாடல் எது?
விடை: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
பொது அறிவு மற்றும் முக்கிய மேற்கோள்கள்
13) பாரதிதாசனின் காலம் மற்றும் பெற்றோர் யாவர்?
விடை: காலம்: 29.04.1891 முதல் 21.04.1964 வரை. பெற்றோர்: கனகசபை - இலக்குமி.
14) "கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி" - வரியைக் கூறியவர்?
விடை: பாரதிதாசன்
15) "சுப்புரத்தினம் நீ ஒரு கவி" என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் யார்?
விடை: பாரதிதாசன்
16) "புதியதோர் உலகு செய்வோம்" மற்றும் "இருட்டறையில் உள்ளதடா உலகம்" - என்றவர் யார்?
விடை: பாரதிதாசன்
17) பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு முதல் எழுத்தும் தலை எழுத்தும் யார்?
விடை: பாரதிதாசன்
18) "தொண்டு செய்து பழுத்த பழம்" என்று பெரியாரைப் போற்றியவர் யார்?
விடை: பாவேந்தர் பாரதிதாசன்
19) பாரதிதாசன் இயற்றிய நூல்கள் (முழுப் பட்டியல்):
குடும்ப விளக்குபாண்டியன் பரிசு
அழகின் சிரிப்புஇருண்ட வீடு
தமிழியக்கம்சேர தாண்டவம்
தமிழச்சியின் கத்திகுறிஞ்சித் திட்டு
படித்த பெண்கள்இசையமுது
பிற அறிஞர்களின் வரிகள் (ஒப்பீடு)
20) "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்" - என்றவர் யார்?
விடை: பாரதியார்
21) "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" - என்றவர் யார்?
விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY