தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி (46 வினாக்கள்)

பகுதி 1: ஊர்களும் புலவர்களும்
1) பாரதியார் பிறந்த இடம் எது?
விடை: எட்டையபுரம்
2) தேசிகவிநாயகர் பிறந்த இடம் எது?
விடை: கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
3) தேசிகவிநாயகர் கல்வி கற்ற இடம் எது?
விடை: திருநெல்வேலி
4) கோயில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழக்கே அமைந்த ஊர் எது?
விடை: எட்டையபுரம்
5) வெங்கடேச எட்டப்ப ராசாவைப் பற்றிப் பாடல் இயற்றியவர் யார்?
விடை: கடிகைமுத்துப் புலவர்
6) தாமிரபரணியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?
விடை: சீவலப்பேரி என்கிற முக்கூடல்
7) முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?
விடை: முக்கூடல் பள்ளு
8) குடியானவர்களுக்கு சங்கீதம் எது?
விடை: இடிமுழக்கம்
9) குடியானவர்களுக்கு நடனம் எது?
விடை: மின்னல் வீச்சு
10) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?
விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
11) நெல்லையப்பர் கோவிலில் காந்திமதித் தாயைத் தரிசித்தவர் யார்?
விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
12) நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?
விடை: ஆழ்வார் திருநகரி (பழைய பெயர்: திருக்குருகூர்)
13) ஆயிரம் தமிழ்ப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: திருவாய்மொழி
14) சிவைகுண்டப் பெருமாளைப் பற்றிப் பாடியவர் யார்?
விடை: பிள்ளைப் பெருமாள்
15) திருவாய்மொழியை இயற்றியவர் யார்?
விடை: நம்மாழ்வார்
16) கொற்கை முத்தைப் பற்றிப் பாடிய புலவர் யார்?
விடை: முத்தொள்ளாயிர ஆசிரியர்
17) காயல்பட்டினத்தில் இருந்த பெருவணிகர் யார்?
விடை: சீதக்காதி
18) தமிழ் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
விடை: சீதக்காதி
19) சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்?
விடை: நமசிவாயப் புலவர்
20) திருப்புகழ் பாடியவர் யார்?
விடை: அருணகிரிநாதர்
21) கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?
விடை: முருகன்
22) காவடிச்சிந்து பாடியவர் யார்?
விடை: அண்ணாமலையார்
23) காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்?
விடை: பம்பை, மேளம், ஆட்டத்துடன்
24) சங்கரன் கோவில் கோமதித் தாயைப் பாடியவர் யார்?
விடை: அழகிய சொக்கநாதர்
25) சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைந்துள்ள தளம் எது?
விடை: கருவை நல்லூர் (கரிவலம் வந்த நல்லூர்)
26) கருவை நல்லூரில் சிறந்த புலவரால் பாடப்பட்ட நூல்கள் யாவை?
விடை: திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி
27) கவி இல்லாமலே மனசைக் கவரக் கூடிய இடம் எது?
விடை: குற்றாலம்
28) "நுண்துளி தூங்கும் குற்றாலம்" எனப் பாடியவர் யார்?
விடை: திருஞானசம்பந்தர்
29) "குற்றாலத் துறைகின்ற கூத்தா உன் குரைகழற்கே" எனப் பாடியவர் யார்?
விடை: மாணிக்கவாசகர்
30) குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?
விடை: திரிகூடராசப்பக் கவிராயர்
31) திரிகூடராசப்பக் கவிராயர் வாழ்ந்த ஊர் எது?
விடை: மேலகரம்
பகுதி 2: இரசிகமணி டி.கே.சி - சிறப்புகள்
32) டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்?
விடை: டி.கே.சிதம்பரநாதர்
33) டி.கே.சி என்ன தொழில் செய்து வந்தார்?
விடை: வழக்கறிஞர்
34) 'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
விடை: டி.கே.சி
35) 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டம் நடத்தியவர் யார்?
விடை: டி.கே.சி
36) 'இதய ஒலி' என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: டி.கே.சி
37) டி.கே.சி எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
விடை: கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர்
38) இரசிகமணி டி.கே.சிதம்பரனாரின் காலம் என்ன?
விடை: 1882 முதல் 1954 வரை
39) "தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை" என்றவர் யார்?
விடை: இரசிகமணி டி.கே.சி
40) டி.கே.சியின் வீட்டில் ஞாயிறு தோறும் கூடிய கூட்டத்திற்கு என்ன பெயர்?
விடை: வட்டத் தொட்டி
41) தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும் என்றவர் யார்?
விடை: டி.கே.சி
42) யார் கடிதங்கள் புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன?
விடை: டி.கே.சி
43) டி.கே.சியின் தொழில் என்ன?
விடை: வழக்கறிஞர் தொழில்
44) டி.கே.சியின் நூல்கள் யாவை?
விடை: இதய ஒலி, கம்பர் யார்?
45) டி.கே.சி எந்த நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்?
விடை: முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம்
46) சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும், அறநிலையத்துறை ஆணையராகவும் திகழ்ந்தவர் யார்?
விடை: டி.கே.சி

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY