சிறுபஞ்சமூலம்- ஏலாதி-ஆசாரக்கோவை-இன்னா நாற்பது-கார் நாற்பது
தமிழ் ஒரு வரி வினா-விடை - பகுதி 3
சிறுபஞ்ச மூலம்
1. சிறுபஞ்ச மூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: காரியாசன்
2. காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனக் கூறும் நூல் எது?
விடை: சிறப்பாயிரம்
3. காரியாசன் சமயம் என்ன?
விடை: சமணம்
4. கண்வனப்புக் கண்ணோட்டம் –என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: சிறுபஞ்ச மூலம்
5. சிறுபஞ்ச மூலத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
விடை: 97 வெண்பாக்கள்
6. உடல் நோயைத் தீர்க்கும் 5 மூலிகைகள் யாவை?
விடை: கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
7. சிறுபஞ்ச மூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?
விடை: 5 கருத்துகள்
8. கண்ணுக்கு அழகு எது?
விடை: இரக்கம் கொள்தல்
9. காலுக்கு அழகு எது?
விடை: பிறரிடம் இரந்து செல்லாமை
10. ஆராய்ச்சிக்கு அழகு என சிறுபஞ்சமூலம் குறிப்பிடுவது என்ன?
விடை: முடிவைத் துணிந்துரைத்தல்
11. காரியாசனும் யாரும் ஒரு சாலை மாணாக்கர்கள்?
விடை: கணிமேதாவியார்
12. சிறுபஞ்சமூலம் எந்த வகை நூல்?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்
13. சிறுபஞ்சமூலம் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன?
விடை: ஐந்து
14. பண்ணுக்கு அழகு ____ நன்னென்றல்?
விடை: கேட்போர்
15. சிறுபஞ்ச மூலம் ஒரு ____ ஆகும்
விடை: அறநூல்
16. தமிழகத்தில் சங்க இலக்கியத்தை தொடர்ந்து வந்த நூல்கள் யாவை?
விடை: நீதி நூல்கள்
17. நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
18. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
விடை: ஐந்து சிறிய வேர்கள்
19. ஐந்து சிறிய வேர்கள் யாவை?
விடை: கண்டங்கத்தரி, சிறுவழுதுணை,சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
20. மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிபடுத்தும் நூல் எது?
விடை: சிறுபஞ்சமூலம்
21. சிறுபஞ்சமூலம் என்ன வகையில் வாழ்வியல் உண்மைகளை கூறுகின்றன?
விடை: நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில்
22. எந்த நூல் இவரைக் மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது?
விடை: பாயிரச் செய்யுள்
23. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்? (காரி –இயற்பெயர், ஆசான்-தொழிற்பெயர்)
விடை: காரியாசான்
24. காரியாசான் யாருடைய மகன்?
விடை: மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மகன்
ஏலாதி
26. ஏலாதியை இயற்றியவர் யார்?
விடை: கணிமேதாவியார்
27. சமண சமயத்திற்க்குரிய அறக்கருத்து என்ன?
விடை: கொல்லாமை
28. வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு –எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
விடை: ஏலாதி
29. கணிமேதாவியார் எந்த காலத்தில் வாழ்ந்தார்?
விடை: கடைசங்க காலத்தில் வாழ்ந்தார்
30. ஏலாதி எந்த நூல்களின் கீழ் வரும்?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு
31. நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை கூறும் நூல் எது?
விடை: ஏலாதி
32. கணிமேதாவியார் எந்த சமயத்தை சார்ந்தவர்?
விடை: சமண சமயம்
33. ஏலாதி நூல் அமைப்பு யாது?
விடை: சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என 81 வெண்பாக்களை கொண்டது
34. ஏலாதி நூலில் இடம் பெற்றுள்ள மருந்து பொருட்கள் யாவை?
விடை: சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுநாவற்பூ, இலவங்கம், ஏலம்
35. எந்த மருந்து பொருளை முதன்மையாக கொண்ட நூல் ஏலாதி?
விடை: ஏலம்
36. மருந்து பொருட்களால் அமையப் பெற்ற 2 நூல்கள் யாது?
விடை: திரிகடுகம் மற்றும் ஏலாதி
ஆசாரக்கோவை
37. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
விடை: பெருவாயின் முள்ளியார்
38. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
விடை: கயத்தூர்
39. ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?
விடை: நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
40. ஆசாரக்கோவையில் எத்தனை நல் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன?
விடை: எட்டு
41. ஆசாரக்கோவை எந்த வகை நூல் ஆகும்?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு
42. ஆசாரக்கோவையில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
விடை: 100 வெண்பாக்கள்
இன்னா நாற்பது
43. இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்?
விடை: கபிலர்
44. கபிலரின் காலம் என்ன?
விடை: நான்காம் நூற்றாண்டு
45. இன்னா நாற்பதின் பாவகை என்ன?
விடை: வெண்பா
46. இன்னா நாற்பதில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை: 40+1
47. இன்னா என்பதன் பொருள் என்ன?
விடை: துன்பம்
48. துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல் எது?
விடை: இன்னா நாற்பது
49. இன்னா நாற்பது எந்த வனப்பிற்கு உரியது?
விடை: அம்மை
50. இன்னா நாற்பதில் எத்தனை இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன?
விடை: 164
கார் நாற்பது
51. கார் நாற்பதின் ஆசிரியர் யார்?
விடை: மதுரைக் கன்னங் கூத்தனார்
52. கார் நாற்பதின் திணை என்ன?
விடை: முல்லைத் திணை
53. கார் நாற்பதின் பாவகை என்ன?
விடை: வெண்பா
54. கார் நாற்பதில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை: நாற்பது
55. கார் என்பதன் பொருள் என்ன?
விடை: கார் காலம், மழைக் காலம்
56. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒரு திணையை மட்டும் பாடிய நூல் எது?
விடை: கார் நாற்பது
57. அகப் பொருள் கூறும் நூல்களில் மிகவும் சிறியது எது?
விடை: கார் நாற்பது
58. சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றிக் கூறும் நூல் எது?
விடை: கார் நாற்பது
59. கார் நாற்பது எந்த பாங்கில் அமைந்துள்ளது?
விடை: நாடகப் பாங்கில்
Comments
Post a Comment