களவழி நாற்பது-ஐந்திணை ஐம்பது-ஐந்திணை எழுபது-திணைமொழி ஐம்பது-திணைமாலை நூற்றைம்பது-கைந்நிலை
தமிழ் ஒரு வரி வினா-விடை - பகுதி-4
களவழி நாற்பது
1. களவழி நாற்பதின் ஆசிரியர் யார்?
விடை: பொய்கையார்
2. களவழி நாற்பதில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளது?
விடை: நாற்பது
3. களவழி நாற்பதின் பா வகை என்ன?
விடை: வெண்பா
4. களவழி நாற்பதின் திணை என்ன?
விடை: புறத்திணை (வாகை)
5. களம் என்பதன் பொருள் என்ன?
விடை: போர்க்களம்
6. களவழி நாற்பது பெயர்க்காரணம் என்ன?
விடை: போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டுள்ளதால்
7. களவழியைப் பற்றிக் கூறும் இலக்கண நூல் எது?
விடை: தொல்காப்பியம்
8. களவழி நாற்பதின் வேறு பெயர் என்ன?
விடை: பரணி நூலின் தோற்றுவாய்
9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் எது?
விடை: களவழி நாற்பது
10. களவழி நாற்பதை பொய்கையார் யார் மீது பாடினார்?
விடை: சோழன் மீது (சேரமானை விடுவிக்க)
ஐந்திணை ஐம்பது
11. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்?
விடை: மாறன் பொறையனார்
12. ஐந்திணை ஐம்பது எந்த திணையைச் சார்ந்தது?
விடை: ஐந்து அகத்திணை
13. ஐந்திணை ஐம்பது திணை வைப்பு முறை என்ன?
விடை: முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
14. ஐந்திணை ஐம்பதின் மொத்த பாடல்கள் எண்ணிக்கை?
விடை: ஐம்பது
15. ஐந்திணை ஐம்பதின் பாவகை என்ன?
விடை: வெண்பா
16. முல்லைத் திணையை முதலாவதாகக் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?
விடை: ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
17. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்?
விடை: மூவாதியார்
18. ஐந்திணை எழுபதின் பா வகை என்ன?
விடை: வெண்பா
19. ஐந்திணை எழுபதின் திணை என்ன?
விடை: ஐந்து அகத்திணை
20. ஐந்திணை எழுபதின் மொத்த பாடல்கள் எவ்வளவு?
விடை: 70
21. ஐந்திணை எழுபதில் ஒரு திணைக்கு எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை: 14
22. ஐந்திணை எழுபதின் திணை வைப்பு முறை என்ன?
விடை: குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
திணைமொழி ஐம்பது
23. திணைமொழி ஐம்பதின் ஆசிரியர் யார்?
விடை: கண்ணன் சேந்தனார்
24. திணைமொழி ஐம்பதின் திணைகள் என்ன?
விடை: ஐந்து அகத்திணை
25. திணைமொழி ஐம்பதின் பா வகை என்ன?
விடை: வெண்பா
26. திணைமொழி ஐம்பதில் ஒவ்வொரு திணையும் கொண்டுள்ள பாடல்கள் எத்தனை?
விடை: 10
27. திணைமொழி ஐம்பதின் மொத்த பாடல்கள் எவ்வளவு?
விடை: 50
28. திணைமொழி ஐம்பதின் திணை வைப்பு முறை என்ன?
விடை: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
திணைமாலை நூற்றைம்பது
29. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியர் யார்?
விடை: கணிமேதாவியார்
30. திணைமாலை நூற்றைம்பதின் திணை என்ன?
விடை: ஐந்து அகத்திணை
31. திணைமாலை நூற்றைம்பதில் ஒரு திணைக்கு எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை: 30
32. திணைமாலை நூற்றைம்பதில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது?
விடை: 150
33. திணைமாலை நூற்றைம்பதின் பா வகை என்ன?
விடை: வெண்பா
34. திணைமாலை நூற்றைம்பதின் திணை வைப்பு முறை என்ன?
விடை: குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
35. கணிமேதாவியார் சமயம் என்ன?
விடை: சமணம்
36. கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் என்ன?
விடை: ஏலாதி
37. பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் மிகப் பெரியது எது?
விடை: திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
38. கைந்நிலையின் ஆசிரியர் யார்?
விடை: புல்லாங்காடனார்
39. கைந்நிலையின் மொத்த பாடல்கள் எண்ணிக்கை?
விடை: 60
40. கைந்நிலையின் திணை என்ன?
விடை: ஐந்து அகத்திணை
41. கைந்நிலையில் ஒரு திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் உள்ளது?
விடை: 12
42. கைந்நிலையின் திணை வைப்பு முறை என்ன?
விடை: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
43. கைந்நிலையின் பா வகை என்ன?
விடை: வெண்பா
44. கை என்பதன் பொருள் என்ன?
விடை: ஒழுக்கம்
45. கைந்நிலை பெயர்க்காரணம் என்ன?
விடை: ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல்
46. கைந்நிலையின் வேறு பெயர் என்ன?
விடை: ஐந்திணை அறுபது
Comments
Post a Comment