தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - குன்றக்குடி அடிகளார்
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - குன்றக்குடி அடிகளார்
பகுதி 1: ஒப்புரவு நெறி (வாழ்வியல்)
1) எந்த நூல் ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்தியது?
விடை: திருக்குறள்
2) ஒப்புரவு நெறி என்றால் என்ன?
விடை: தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறி.
3) திருவள்ளுவரின் வாழும் நெறி (பொதுவுடைமை) என்பது என்ன?
விடை: ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் நெறி.
4) ஒப்புரவு பற்றி பாவேந்தர் பாரதிதாசனின் கூற்று என்ன?
விடை: "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்"
5) வாழ்வு அறநிலையைப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் எனக் கூறியவர் மற்றும் வழிமொழிந்தவர் யார்?
விடை: கூறியவர்: அப்பரடிகள். வழிமொழிந்தவர்: காந்தியடிகள்.
6) தமிழ் மரபு வறுமை மற்றும் செல்வத்தை எதனோடு ஒப்பிடுகிறது?
விடை: வறுமை - பிணி (நோய்); செல்வம் - மருந்து.
7) "செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே" - இடம்பெற்ற நூல் எது?
விடை: புறநானூறு
பகுதி 2: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
8) மக்கள் பணியையே இறை பணியாக எண்ணியவர் யார்?
விடை: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
9) குன்றக்குடி அடிகளார் எந்த மடத்தின் தலைவராக விளங்கினார்?
விடை: குன்றக்குடி மடம்
10) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் யார்?
விடை: குன்றக்குடி அடிகளார்
11) குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள் யாவை?
விடை: நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்.
12) குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் யாவை?
விடை: அருளோசை, அறிக அறிவியல்.
Comments
Post a Comment