தமிழின் தொன்மை & சிறப்புகள் - PART 7
தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 7
10-ம் வகுப்பு தமிழ் (புதிய புத்தகம்) - சங்க இலக்கியத்தில் அறம்
1. சமயக் கலப்பில்லாத மானிட அறம் நிலவிய காலம் எது?
விடை: சங்ககாலம்
2. எந்த காலத்தில் அறத்தை உறவின் மையமாக கொண்டிருந்தனர்?
விடை: சங்ககாலம்
3. சங்க காலத்திற்குப் பின் அறஇலக்கியங்கள் காலத்தை எவ்வாறு அழைக்கலாம்?
விடை: அறநெறிக்காலம் (சமயம் சார்ந்தவை)
4. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை என்றவர் யார்?
விடை: திறனாய்வாளர் அர்னால்டு
5. சங்ககால வள்ளல்களில் 'ஆய்' பற்றி குறிப்பிட்டவர் யார்?
விடை: ஏணிச்சேரி முடமோசியார் (நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை)
6. "இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம்எனும்" என்ற புறநானூற்று வரியைக் கூறியவர்?
விடை: ஏணிச்சேரி முடமோசியார்
7. "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" - இவ்வரி உணர்த்தும் அறம் எது?
விடை: அரசியல் அறம்
8. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?
விடை: ஊன் பொதிப் பசுங்குடையார்
9. "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை" - நூல் எது?
விடை: மதுரைக்காஞ்சி
10. அமைச்சர்களை 'செம்மை சான்ற காவிதி மக்கள்' என சிறப்பித்தவர் யார்?
விடை: மாங்குடி மருதனார்
11. அறங்கூறவையம் பற்றி 'அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்' எனக் கூறும் நூல்?
விடை: புறநானூறு
12. எந்த ஊரிலிருந்த அறங்கூறவையம் சங்க காலத்தில் சிறப்பு பெற்றது?
விடை: உறையூர்
13. மதுரையில் இருந்த அறங்கூறவையம் 'துலாக்கோல்' போல் சிறப்பு மிக்கது என்ற நூல்?
விடை: மதுரைக்காஞ்சி
14. "எறியார் எறிதல் யாவணது" - வலிமை குறைந்தாரோடு போர் செய்யக் கூடாது என்றவர்?
விடை: ஆவூர் மூலங்கிழார்
15. செல்வத்தின் பயனே ஈதல் என்றவர் யார்?
விடை: மதுரை கணக்காயனார் மகன் நக்கீரன்
16. கடையெழு வள்ளல்களின் கொடைப் பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
விடை: சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
17. எந்த வகை இலக்கியங்கள் 'கொடை இலக்கியங்களாக' திகழ்கின்றன?
விடை: ஆற்றுப்படை இலக்கியங்கள்
18. பதிற்றுப்பத்தில் எந்த அரசர்களின் கொடைப் பெருமை பதிவாக உள்ளது?
விடை: சேர அரசர்கள்
19. வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?
விடை: பசிப்பிணி மருத்துவன், இல்லோர் ஒக்கல் தலைவன்
20. வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுத்தவர் யார்?
விடை: பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் (நக்கீரர்)
21. உலகமே வருமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார்?
விடை: ஒளவையார்
22. "வள்ளலின் பொருள் இரவலின் பொருள்" என்றவர் யார்?
விடை: பெரும்பதுமனார்
23. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்துப் பரிசளிப்பவர் யார்?
விடை: ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
24. பேகன் 'மறுமை நோக்கி கொடுக்காதவன்' என்றவர் யார்?
விடை: பரணர்
25. பரிசு பெறாமல் திரும்புவது, தன் நாட்டைத் இழந்ததை விட பெருந்துன்பம் என்றவர்?
விடை: குமணன் (பெருந்தலைச் சாத்தனார்)
26. எல்லாவற்றையும் (தேரையும் கூட) கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி என்றவர்?
விடை: கபிலர்
27. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் கூறும் நூல்?
விடை: புறநானூறு
28. உதவி செய்தலை “உதவியாண்மை” என்றவர் யார்?
விடை: ஈழத்துப் பூதன் தேவனார்
29. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்?
விடை: நல்வேட்டனார்
30. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல்" – யாருடைய வரி?
விடை: நல்லந்துவனார்
31. உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என்றவர் யார்?
விடை: பெருங்கடுக்கோ
32. "செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு" என்கிறது எது?
விடை: தமிழ் இலக்கியம்
33. "நிறைவடைகிறவனே செல்வன்" எனக் கூறும் தத்துவம் எது?
விடை: சீன நாட்டுத் தாவோயியம்
34. வாய்மை பேசும் நாவை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு போற்றுகின்றன?
விடை: பொய்யாச் செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா
35. இன்பம் மற்றும் துன்பக் கதவைத் திறப்பது எது?
விடை: நா (சொல்)
36. வாய்மையை “பிழையா நன்மொழி” என்று கூறும் நூல் எது?
விடை: நற்றிணை
37. பொய் பேசும் நாவை "பொய் மொழிக் கொடுஞ்சொல்" என்று கூறிய நூல்?
விடை: நற்றிணை
38. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் எந்த தரம்?
விடை: மூன்றாம் தரம்
39. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் எந்த தரம்?
விடை: இரண்டாம் தரம்
40. இயல்பாக அறியும் அறம் (சங்க இலக்கிய அறங்கள்) எந்த தரம்?
விடை: முதல் தரம்
41. போதிதர்மர் (6-ம் நூற்றாண்டு) எந்த நகரத்துச் சிற்றரசர்?
விடை: காஞ்சி நகரம்
42. போதிதர்மர் பெளத்த சமயத்தைப் போதிக்க எந்த நாட்டிற்குச் சென்றார்?
விடை: சீனா
43. போதிதர்மர் போதித்த சமயப் பிரிவிலிருந்து உருவான மதம் எது?
விடை: ஜென் மதம்
44. போதிதர்மருக்கு இன்றளவும் கோவில் கட்டி வணங்குபவர்கள் யார்?
விடை: சீன நாட்டவர்
Comments
Post a Comment