தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்-PART-1

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்

10-ம் வகுப்பு: தமிழ்ச் சொல்வளம் (1-33)
1) "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் யார்?
விடை: மகாகவி பாரதியார்
2) "திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: கால்டுவெல்
3) ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
சொல்விளக்கம்
தாள்நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டுகீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறுகுத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு/தட்டைகம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழிகரும்பின் அடி
கழைமூங்கிலின் அடி
அடிபுளி, வேம்பு முதலியவற்றின் அடி
4) கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
பெயர்விளக்கம்
கவைஅடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
கொம்பு/கொப்புகவையின் பிரிவு
கிளைகொம்பின் பிரிவு
சினைகிளையின் பிரிவு
போத்துசினையின் பிரிவு
குச்சுபோத்தின் பிரிவு
இணுக்குகுச்சியின் பிரிவு
5) காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
சுள்ளிகாய்ந்த குச்சு (குச்சி)
விறகுகாய்ந்த சிறுகிளை
வெங்கழிகாய்ந்த கழி
கட்டைகாய்ந்த கொம்பும் கவையும் அடியும்
6) தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
இலைபுளி, வேம்பு முதலியவற்றின் இலை
தாள்நெல், புல் முதலியவற்றின் இலை
தோகைசோளம், கரும்பு முதலியவற்றின் இலை
ஓலைதென்னை, பனை முதலியவற்றின் இலை
சண்டுகாய்ந்த தாளும் தோகையும்
சருகுகாய்ந்த இலை
7) தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?
துளிர் / தளிர்நெல், புல் முதலியவற்றின் கொழுந்து
முறி / கொழுந்துபுளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
குருத்துசோளம், கரும்பு, தென்னை, பனை ஆகியவற்றின் கொழுந்து
கொழுந்தாடைகரும்பின் நுனிப்பகுதி
8) பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அரும்புபூவின் தோற்ற நிலை
போதுபூ விரியத் தொடங்கும் நிலை
மலர் (அலர்)பூவின் மலர்ந்த நிலை
வீமரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
செம்மல்பூ வாடின நிலை
9) சொல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?
விடை: தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
10) திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
11) பாவாணார் நூலகம் அமைத்திருப்பவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
12) தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
13) இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?
விடை: திரு.வி.க
14) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
15) திரு.வி.கா போல் கண்களை மூடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
விடை: இரா. இளங்குமரனார்
16) தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?
விடை: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப்பாடினிய உரை, தேவநேயம்.
17) தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?
பூம்பிஞ்சுபூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சுஇளம் காய்
வடுமாம்பிஞ்சு
மூசுபலாப்பிஞ்சு
கவ்வைஎள்பிஞ்சு
குரும்பைதென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
முட்டுக் குரும்பைசிறு குரும்பை
இளநீர்முற்றாத தேங்காய்
நுழாய்இளம் பாக்கு
கருக்கல்இளம் நெல்
கச்சல்வாழைப்பிஞ்சு
18) தாவரங்களின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
கொத்துஅவரை, துவரை முதலியவற்றின் குலை
குலைகொடி முந்திரி போன்றவற்றின் குலை
தாறுவாழைக் குலை
கதிர்கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்
அலகு / குரல்நெல், திணை முதலியவற்றின் கதிர்
சீப்புவாழைத் தாற்றின் பகுதி
19) கெட்டுப்போன காய் கனி வகைகளின் சொற்கள் யாவை?
சூம்பல்நுனியில் சுருங்கிய காய்
சிவியல்சுருங்கிய பழம்
சொத்தைபுழு பூச்சி அரித்த காய் அல்லது கனி
வெம்பல்சூட்டினால் பழுத்த பிஞ்சு
அழுகல்குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
சொண்டுபதராய் போன மிளகாய்
கோட்டான் காய்கோட்டான் உட்கார்ந்ததால் கெட்ட காய்
தேரைக் காய்தேரை உட்கார்ந்ததால் கெட்ட காய்
ஒல்லிக்காய்தென்னையில் கெட்ட காய்
20) பழங்களின் மேற்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?
தொலிமிக மெல்லியது
தோல்திண்ணமானது
தோடுவன்மையானது
ஓடுமிக வன்மையானது
குடுக்கைசுரையின் ஓடு
மட்டைதேங்காய் நெற்றின் மேற்பகுதி
உமிநெல், கம்பு முதலியவற்றின் மூடி
கொம்மைவரகு, கேழ்வரகு முதலியவற்றின் மூடி
21) தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள் யாவை?
நாற்றுநெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
கன்றுமா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
குருத்துவாழையின் இளநிலை
பிள்ளைதென்னையின் இளநிலை
குட்டிவிளாவின் இளநிலை
மடலி / வடலிபனையின் இளநிலை
பைங்கூழ்நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
22) இலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் எது?
விடை: Leaf
23) இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
விடை: தாள், இலை, தோகை, ஓலை
24) சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை: 60 வகை
25) ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
விடை: மலேசியா
26) உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?
விடை: தமிழ் மொழி
27) மேற்கூறிய கூற்றைக் கூறியவர் யார்?
விடை: பன்மொழிப் புலவர் க.அப்பாதுரையார்
28) மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவபர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
29) "தமிழ் சொல்வளம்" என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
விடை: தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்
30) உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
31) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராக இருந்தவர் யார்?
விடை: தேவநேயப்பாவாணர்
32) இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
விடை: தமிழ் மொழி
33) முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?
விடை: கார்டிலா (Cartilha), 1554 ஆம் ஆண்டு

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY