தமிழின் தொன்மை & சிறப்புகள் - PART 6
தமிழின் தொன்மை & சிறப்புகள் - PART 6
9-ம் வகுப்பு: விரிவாகும் ஆளுமை (1-20)
1. மாநாடுகள், கருத்து அரங்குகள் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் யார்?
விடை: பேராசிரயர் தனிநாயகம்
2. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" – என்ற வரிக்குச் சொந்தக்காரர் யார்?
விடை: கணியன் பூங்குன்றனார்
3. லத்தீன் புலவர் தெரென்சின் கூற்று யாது?
விடை: "நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று"
4. முதிர்ந்த ஆளுமைக்கு 3 இலக்கணங்களை கூறிய உளநூல் வல்லுநர் யார்?
விடை: கோர்டன் ஆல்போர்ட்
5. கோர்டன் ஆல்போர்ட் கூறிய மூன்று இலக்கணங்கள் யாவை?
விடை: 1. ஈடுபாடுகளை வளர்த்தல், 2. அறிந்து கொள்ளும் ஆற்றல், 3. வாழ்க்கை தத்துவத்தை கடைபிடித்தல்
6. "குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும்" என்று கூறிய புலவர் யார்?
விடை: புலவர் ஆலத்தூர் கிழார்
7. புலவர் ஆலத்தூர் கிழார் கூறிய வரிகள் என்ன?
விடை: "பூட்கையில்லோன் யாக்கை போல"
8. சீன நாட்டில் நலவியலை கற்பித்தவர்கள் யாவர்?
விடை: லாவோட்சும், கன்பூசியஸ்
9. கிரேக்க சிந்தனைகளை மட்டும் வழங்கியவர்கள் யாவர்?
விடை: பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
10. "உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியங்களில் காண்பது அரிது" - திருக்குறளைப் பற்றி இவ்வாறு கூறியவர் யார்?
விடை: ஆல்பர்ட் சுவைட்சர்
11. அரசர்களையும், வள்ளல்களையும் வாழ்த்தியவர்கள் யாவர்?
விடை: புலவர், பாணர்
12. ஐவகை நிலத்தை பிரித்தவர் யார்?
விடை: தொல்காப்பியர்
13. உலகத் தமிழ் மாநாடுகள் நடந்த இடங்கள் மற்றும் ஆண்டுகள்:
| கோலாலம்பூர் | 1966, 1987 |
| சென்னை | 1968 |
| பாரிஸ் | 1970 |
| யாழ்ப்பாணம் | 1974 |
| மதுரை | 1981 |
| மொரிசியஸ் | 1989 |
| தஞ்சாவூர் | 1995 |
| கோவை (செம்மொழி மாநாடு) | 2010 |
14. பண்புடைமை அதிகாரத்திற்கு உரை கண்டவர் யார்?
விடை: பரி பெருமாள்
15. "குறிக்கோள் மாந்தன்" என்பதன் தமிழ்ச்சொல்?
விடை: பூட்கை மகன்
16. திருவள்ளுவரை "உலகப் புலவர்" என்று போற்றியவர் யார்?
விடை: ஜி.யு. போப்
17. "எல்லோருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு" என்று கூறிய தத்துவ ஞானி யார்?
விடை: செனக்கா
18. "தமிழ் பண்பாடு" என்ற இதழை தொடங்கியவர் யார்?
விடை: தனிநாயகம்
19. "விரிவாகும் ஆளுமை" என்ற சொற்பொழிவை ஆற்றியவர் யார்?
விடை: தனிநாயகம்
20. தனிநாயகம் அவர்கள் "விரிவாகும் ஆளுமை" சொற்பொழிவை எங்கு ஆற்றினார்?
விடை: இலங்கை, யாழ் பல்கலைக்கழகம்
10-ம் வகுப்பு: விருந்து போற்றுதும் (21-40)
21. விருந்தோம்பலை வலியுறுத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் யார்?
விடை: திருவள்ளுவர்
22. முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை வள்ளுவர் எவ்வாறு கூறுகிறார்?
விடை: "மோப்பக் குழையும் அனிச்சம்"
23. "விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: சிலப்பதிகாரம்
24. விருந்தோம்பல் பற்றிய 17-ம் நூற்றாண்டின் சுவர் ஓவியம் எங்கு உள்ளது?
விடை: சிதம்பரம்
25. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறும் நூல்?
விடை: கம்பராமாயணம்
26. விருந்தினருக்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாகியவர் யார்?
விடை: ஜெயங்கொண்டார் (கலிங்கத்துப்பரணி)
27. "அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே" - நூல் எது?
விடை: புறநானூறு (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
28. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்கும் இயல்பு பற்றி கூறும் நூல்?
விடை: நற்றிணை
29. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" - என்ற வரியின் பொருள் யாது?
விடை: இரவு நேரத்தில் விருந்து வந்தாலும் மகிழ்ந்து உணவிடுதல்
30. "காலின் ஏழடிப் பின் சென்று" - விருந்தினரை வழி அனுப்பும் முறை பற்றி கூறும் நூல்?
விடை: பொருநராற்றுப்படை
31. விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாகப் படைத்த செய்தி கூறும் நூல்?
விடை: புறநானூறு ("குரல்உணங்கு விதைத் திணை...")
32. யாழைப் பணையம் (அடகு) வைத்து விருந்தினருக்கு உணவளித்த செய்தியைக் கூறும் நூல்?
விடை: புறநானூறு ("கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்")
33. விதைத்த நெல்லை மீண்டும் அரித்துச் சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்?
விடை: இளையான்குடி மாறநாயனார்
34. நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு வழங்கிய உணவு என்ன?
விடை: குழல் மீன் கறி (சிறுபாணாற்றுப்படை)
35. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ" - எந்த நூல்?
விடை: குறுந்தொகை
36. "மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" – எனக் கூறியவர் யார்?
விடை: ஒளவையார்
37. யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாகத் தோன்றின?
விடை: நாயக்கர், மராட்டியர் காலத்தில்
38. தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்த இடம் உண்டு?
விடை: வாழை இலை
39. எந்த நாட்டுத் தமிழ்ச் சங்கம் "வாழையிலை விருந்து" விழாவை ஆண்டுதோறும் கொண்டாடுகிறது?
விடை: அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
40. "இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல" - விருந்து உண்ண அமர்ந்திருப்பதை பாடியவர்?
விடை: பாரதிதாசன்
Comments
Post a Comment