தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - அகரமுதலி (அகராதி)
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - அகரமுதலி
10-ம் வகுப்பு (பழைய புத்தகம்): அகராதி வரலாறு (1-35)
1) அகராதி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: அகரமுதலி
2) நிகண்டுகளில் மிகவும் பழமையானது எது?
விடை: சேந்தன் திவாகரம்
3) நிகண்டுகளில் சிறப்பானது எது?
விடை: சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர்)
4) "அகராதி" என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய நூல்?
விடை: திருமூலரின் திருமந்திரம்
5) தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி எது?
விடை: சதுரகராதி (வீரமாமுனிவர்)
6) வீரமாமுனிவர் எந்த ஆண்டு சதுரகராதியை வெளியிட்டார்?
விடை: 1732 ஆம் ஆண்டு
7) "அகராதி" என்னும் சொல்லை அடைமொழியாகக் கொண்ட நிகண்டு எது?
விடை: அகராதி நிகண்டு
8) "சதுர்" என்பதன் பொருள் யாது?
விடை: நான்கு
9) பெயர், பொருள், தொகை, தொடை எனப் பொருள் விளக்கம் தந்த அகரமுதலி?
விடை: சதுரகராதி
10) வீரமாமுனிவர் வெளியிட்ட பிற அகராதிகள் யாவை?
- தமிழ் - இலத்தீன் அகராதி
- இலத்தீன் - தமிழ் அகராதி
- தமிழ் - பிரெஞ்சு அகராதி
- பிரெஞ்சு - தமிழ் அகராதி
- போர்த்துக்கீசிய - இலத்தீன் தமிழ் அகராதி
11) அகரமுதலிகள் தோன்றுவதற்கு திருப்புமுனையாக அமைந்தது எது?
விடை: அகராதி நிகண்டு
12) தமிழ் - தமிழ் அகராதியை வெளியிட்டவர் யார்?
விடை: லெவி ஸ்பால்டிஸ்
13) தமிழ் சொல்லகராதியை வெளியிட்டவர் யார்?
விடை: யாழ்ப்பாணம் கதிரைவேலனார்
14) தமிழ் பேரகராதியை வெளியிட்டவர் யார்?
விடை: குப்புசாமி
15) படங்களுடன் கூடிய அகரமுதலியை வெளியிட்டவர் யார்?
விடை: இராமநாதன்
16) தமிழ் - ஆங்கில பேரகராதியை வெளியிட்டவர் யார்?
விடை: வின்சுலோ
17) எந்த ஆண்டு பாவன்ந்தம் தற்கால சொல்லகராதியை வெளியிட்டார்?
விடை: 1925
18) மதுரை தமிழ் சொல்லகராதி எந்த ஆண்டு வெளிவந்தது?
விடை: 1937
19) தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் சார்பில் தமிழ்-தமிழ் அகரமுதலியை தொகுத்தவர்?
விடை: மு.சண்முகம் (1985)
20) இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அகரமுதலி எது?
விடை: சென்னை பல்கலைக்கழக அகராதி
21) சென்னை பல்கலைக்கழக அகராதியின் வேறு பெயர் யாது?
விடை: தமிழ் லெசிக்கன் (Tamil Lexicon - 6 தொகுதிகள்)
22) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை வெளியிட்டவர்?
விடை: தேவநேயப் பாவாணர் (1-ம் தொகுதி 1985, 2-ம் தொகுதி 1993)
23) படங்களுடன் வந்த இரண்டாவது அகரமுதலி எது?
விடை: சொற்பிறப்பியல் அகரமுதலி
24) சொற்பிறப்பு மற்றும் இனமொழிச் சொற்கள் கொண்ட அகரமுதலி எது?
விடை: சொற்பிறப்பியல் அகரமுதலி
25) கணினி உதவியுடன் வெளிவந்த முதல் அகரமுதலி எது?
விடை: கிரியாவின் தற்கால தமிழ் அகராதி
26) தமிழ் கலைக்களஞ்சியத்தின் முன்னோடி எது?
விடை: அபிதான கோசம் (1902)
27) "அபிதான சிந்தாமணி" என்ற நூலை வெளியிட்டவர் யார்?
விடை: ஆ.சிங்காரவேலனார் (1934)
28) இலக்கியம் மற்றும் அறிவியல் செய்திகள் கொண்ட கலைக்களஞ்சியம்?
விடை: அபிதான கோசம்
29) இலக்கியம் மற்றும் புராணச் செய்திகள் கொண்ட கலைக்களஞ்சியம்?
விடை: அபிதான சிந்தாமணி
30) முறையான கலைக்களஞ்சியம் யாரால் வெளியிடப்பட்டது?
விடை: தமிழ் வளர்ச்சிக் கழகம் (10 தொகுதிகள்)
31) கலைச்சொல் அகரமுதலி (காலைகதிர்) வெளியான ஆண்டு?
விடை: 1960
32) அறிவியல் சார்ந்த கலைச்சொல் அகரமுதலியை வெளியிட்டவர்?
விடை: மணவை முஸ்தப்பா
33) அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் வெளியான ஆண்டு எது?
விடை: 1991
34) "அகரமுதலி ஒன்றை நாளும் படித்து வருவாய்" - கூறியவர்?
விடை: பாரதிதாசன்
35) சொற்பிரிப்பு விளக்கம்:
பேரகராதி = பெருமை + அகரம் + ஆதி
அகராதி = அகரம் + ஆதி
அகராதி = அகரம் + ஆதி
Comments
Post a Comment