தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART-3
9-ம் வகுப்பு தமிழ் - திராவிட மொழிக்குடும்பம் & சமூக வாழ்க்கை
இயல் 1: திராவிட மொழிக்குடும்பம் (1-41)
1. திராவிட மொழிகளில் மூத்த மொழியாய் விளங்குவது எது?
விடை: தமிழ்
2. தமக்கு தோன்றிய கருத்தை பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி எது?
விடை: மொழி
3. மெய்பாடுகள், சைகைகள், ஓவியங்கள் மூலம் எதை உணர்த்த முடியவில்லை?
விடை: நுண்பொருளை உணர்த்த முடியவில்லை
4. பருப்பொருள்களை உணர்த்த மனிதன் பயன்படுத்தியவை யாவை?
விடை: மெய்பாடுகள், சைகைகள், ஓவியங்கள்
5. மொழி எப்படி வளர்ந்தது?
விடை: சைகையோடு சேர்ந்த ஒலியால் மொழி வளர்ந்தது
6. மொழிக்குடும்பங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
விடை: பிறப்பு, தொடர்பு, அமைப்பு மூலம்
7. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?
விடை: 1300 க்கு மேற்பட்ட மொழிகள்
8. இந்தியாவில் மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
விடை: நான்கு
9. நான்கு மொழிக்குடும்பங்கள் யாவை?
விடை: இந்தோ-ஆசிய, திராவிட, ஆஸ்திரோ-ஆசிய, சீன-திபெத்திய மொழிகள்
10. இந்தியாவை மொழிகளின் காட்சி சாலை என்று குறிப்பிட்டவர் யார்?
விடை: ச. அகத்தியலிங்கம்
11. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
விடை: குமலரிப்பட்டர்
12. தமிழ் என்ற சொல்லிலிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?
விடை: ஹீராஸ் பாதிரியார்
13. ஹீராஸ் பாதிரியார் இம்மாற்றத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்?
விடை: தமிழ் –தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிட-திராவிட
14. எந்த நூற்றாண்டு வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழி தான் மூலம் என கருதினர்?
விடை: 18 ஆம் நூற்றாண்டு வரை
15. வடமொழி, ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்?
விடை: அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
16. 1816 ஆம் ஆண்டில் மொழி சார்த்த ஆய்வுகள் நடத்திய அறிஞர்கள் யாவர்?
விடை: பாப், ராஸ்க், கிரிம்
17. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்றவர்?
விடை: பிரான்ஸ்சிஸ் எல்லிஸ்
18. தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?
விடை: பிரான்ஸ்சிஸ் எல்லிஸ்
19. தமிழியன் என்று மொழிக்குடும்பத்திற்க்கு பெயரிட்டவர் யார்?
விடை: ஹோக்கன்
20. தமிழியன் குடும்பத்தில் உள்ள மொழிகள் யாவை?
விடை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மால்தோ, தோடா, கோண்டி
21. ஹோக்கன் கருத்தை ஒத்த மற்றொரு அறிஞர் யார்?
விடை: மாக்ஸ்முல்லர்
22. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) ஆசிரியர் யார்?
விடை: கால்டுவெல்
23. திராவிட மொழிக்குடும்பங்களின் வகைகள் யாவை?
விடை: 3 (தென் திராவிட, நடு திராவிட, வடதிராவிட)
24. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
விடை: 28
25. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 மொழிகள் யாவை?
விடை: எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா
26. தென் திராவிட மொழிகள் யாவை?
விடை: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா
27. நடு திராவிட மொழிகள் யாவை?
விடை: தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா, கோலாமி, நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதாபா, கோண்டி, கோயா
28. வட திராவிட மொழிகள் யாவை?
விடை: குரூக், மால்தோ, பிராகுயி
29. திராவிட மொழிகளின் அடிச்சொல் சான்று:
கண் - தமிழ் | கண்ணு - மலையாளம், கன்னடம் | கன்னு - தெலுங்கு, குடகு | ஃகன் - குரூக் | கெண் - பர்ஜி | கொண் - தோடா
30. எண்ணு பெயர்கள் சான்று:
மூன்று (தமிழ்), மூணு (மலையாளம்), மூடு (தெலுங்கு), மூரு (கன்னடம்), மூஜி (துளு)
31. திராவிட மொழிகள் போல் எந்த மொழியில் பால் பாகுபாடு காணப்படுகிறது?
விடை: ஜெர்மன் மொழியில்
32. விலங்குகளில் ஆண், பெண் வேறுபாடு சான்று?
விடை: கடுவன் – மந்தி, களிறு-பிடி
33. எந்த மொழியில் திணை, பால், எண் வேறுபாட்டைக் காட்டுவதில்லை?
விடை: ஆங்கிலம்
34. திராவிட மொழிகளில் எதில் திணை, பால், எண் வேறுபாடு வெளிப்படையாகத் தெரிவதில்லை?
விடை: மலையாள மொழி
35. திராவிட மொழிகளின் பழமையான இலக்கணம்:
தமிழ் – தொல்காப்பியம் | கன்னடம் – கவிராஜ மார்க்கம் | தெலுங்கு – ஆந்திர பாஷாபூசணம் | மலையாளம் – லீலா திலகம்
36. திராவிட மொழிகளின் பழமையான இலக்கியம்:
தமிழ் – சங்க இலக்கியம் | கன்னடம் – கவிராஜ மார்க்கம் | தெலுங்கு – பாரதம் | மலையாளம் – ராம சரிதம்
37. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: மு.வ (மு. வரதராசனார்)
38. இந்திய இலக்கணக் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் இலக்கணம் - ஆசிரியர்?
விடை: செ.வை.சண்முகம்
39. எந்த நாடுகளில் பணத்தாளில் தமிழ் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன?
விடை: இலங்கை, மொரீசியஸ்
40. திராவிட மொழிகளின் சிலவற்றிற்கு தாய் மொழியாக திகழ்வது எது?
விடை: தமிழ் மொழி
41. செய்தாள் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன?
விடை: செய்
இயல் 3: பழந்தமிழர் சமூக வாழ்க்கை (42-71)
42. தமிழரின் சமூக வாழ்க்கை சிறப்பு என்ன?
விடை: தாமும் வாழ்ந்து தம் சுற்றியிருப்பவரையும் வாழ வைப்பது
43. தமிழர்கள் வழிபாடு யாவை?
விடை: திணைநிலத் தெய்வம், இயற்கை, நடுகல்
44. ஐந்திணை தெய்வங்கள் யாவை?
விடை: குறிஞ்சி-முருகன், முல்லை-திருமால், மருதம்-இந்திரன், நெய்தல்-வருணன், பாலை-கொற்றவை
45. இயற்கைப் பொருட்கள் யாவை?
விடை: கதிரவன், நிலவு, நெருப்பு
46. நடுகல் எதன் அடையாளம்?
விடை: வீரம்
47. நடுகல் பற்றி குறிப்பிடும் நூல் எது?
விடை: அகநானூறு ("நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்")
48. விழாக்கள் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் யாவை?
விடை: அகநானூறு, பரிபாடல், கலித்தொகை
49. கார்த்திகைத் திரு நாள் பற்றிக் கூறும் நூல் எது?
விடை: அகநானூறு ("அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்")
50. வேலன் வெறியாட்டு விழா பற்றிக் கூறும் நூல் எது?
விடை: தொல்காப்பியம்
51. வேலன் வெறியாட்டு பற்றிய தொல்காப்பிய வரி என்ன?
விடை: "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்"
52. நேரத்தையும், காலத்தையும் எவ்வாறு கணக்கிட்டனர்?
விடை: கதிரவன், நிலவு, கோள், விண்மீன்கள், மலர்கள் பூக்கும் வேளை
53. மேற்சட்டையின் பெயர் என்ன?
விடை: கஞ்சுகம்
54. துணி தைப்பவரை எவ்வாறு அழைத்தனர்?
விடை: துன்னக்காரர்
55. ஐம்படைத்தாலி என்ற அணிகலனை அணிந்தவர்கள்?
விடை: சிறுவர்கள்
56. ஏறுதழுவதல் எந்த நிலத்தில் சிறப்பாக நடைபெற்றது?
விடை: முல்லை
57. பழந்தமிழ் பெண்கள் விளையாட்டுகள் யாவை?
விடை: கழங்காடல், அம்மானை, பந்தாடுதல், ஓரையாடுதல்
58. என்ன என்ன விலங்கு சண்டைகள் நடைபெற்றன?
விடை: கோழிச் சண்டை, ஆட்டுக்கிடா சண்டை, யானை சண்டை
59. நண்டுக் கறி பற்றி கூறும் சிறுபாணாற்றுபடை வரி?
விடை: “வெண்சோறு கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர்”
60. பழந்தமிழர் வாழ்வு எவ்வாறாக பிரிந்திருந்தது?
விடை: அகம், புறம்
61. அகவாழ்வைப் பாடுவது எது?
விடை: அன்பின் ஐந்திணை
62. தமிழ் இசை நூல்கள் சில கூறுக?
விடை: முதுநாரை, முதுகுருகு, பெருநாரை, பஞ்ச மரபு, இசை நுணுக்கம்
63. இல்லறம் பற்றி “இசையுடன் இன்பமும் ஈதலும்” - இடம் பெற்ற நூல்?
விடை: நற்றிணை
64. திருக்குறளில் கல்வியின் சிறப்பு கூறும் அதிகாரங்கள்?
விடை: கல்வி, கேள்வி, அறிவுடைமை
65. எந்த நூல்களில் கல்வியின் சிறப்பு அதிக இடங்களில் உள்ளன?
விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
66. “பல்கேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர்” - நூல்?
விடை: பட்டினப்பாலை
67. பழந்தமிழகத்தில் உப்பு விற்றவர்களின் பெயர்?
விடை: உமணர்கள்
68. இசைக்கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை: பாணர்கள், பாடினி
69. கூத்துக் கலையில் வல்லவர்கள் யார்?
விடை: கூத்தர், விறலியர்
70. மன்னர்க்குரிய கூத்தின் பெயர் என்ன?
விடை: வேத்தியல்
71. மற்றவர்களுக்குரிய கூத்தின் பெயர் என்ன?
விடை: பொதுவியல்
Comments
Post a Comment