தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர்-PART-2

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தேவநேயப் பாவாணர் (PART 2)

8-ம் வகுப்பு (பழைய புத்தகம்): தேவநேயப் பாவாணர் (1-27)
1) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்?
விடை: கால்டுவெல்
2) தனித் தமிழுக்கு வித்திட்ட கவிஞர் யார்?
விடை: பரிதிமாற்கலைஞர்
3) தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் யார்?
விடை: மறைமலையடிகள்
4) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
விடை: தேவநேயப் பாவாணர்
5) தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர் எது?
விடை: சங்கரன் கோவில், திருநெல்வேலி
6) தேவநேயப் பாவாணரின் பெற்றோர் யாவர்?
விடை: ஞானமுத்து - பரிபூரணம்
7) தேவநேயப் பாவாணரின் காலம் என்ன?
விடை: 07.02.1902 முதல் 15.01.1981 வரை
8) தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
வகைசிறப்புப் பெயர்கள்
முக்கியப் பெயர்கள்செந்தமிழ்ச் செல்வர், தமிழ்பெருங் காவலர், செந்தமிழ் ஞாயிறு
பிற பெயர்கள்தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல்
எண்ணிக்கைமொத்தம் 174 சிறப்புப் பெயர்கள் உள்ளன.
9) கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
10) பிறப்பு, இறப்பு சடங்குகள் யாவும் தமிழில் நடைபெற வேண்டும் எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
11) ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே எனக் கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
12) பாவாணர் நீலகிரி சென்றபோது யாருடைய வீட்டில் தங்கினார்?
விடை: கிருட்டினய்யா
13) "உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும்" - என்று கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
14) வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
15) "தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பறந்து போகும்" - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
16) "எனக்கு வறுமையும் உண்டு... அவற்றோடு மானமும் உண்டு" - கூறியவர்?
விடை: தேவநேயப் பாவாணர்
17) மதுரையில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது?
விடை: 5-வது உலகத்தமிழ் மாநாடு
18) மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை: 1981 ஆம் ஆண்டு
19) மதுரை மாநாட்டில் பாவாணர் சொற்பொழிவாற்றிய தலைப்பு என்ன?
விடை: மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்
20) எந்த நாளில் பாவாணர் மதுரை மாநாட்டில் சொற்பொழிவாற்றினார்?
விடை: 05.01.1981
21) பாவாணர் நூலகம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது?
விடை: சென்னை
22) பாவாணர் கோட்டம் அமைந்துள்ள இடம் எது?
விடை: முறம்பு (ராஜபாளையத்திற்கு அருகில்)
23) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்க இயக்குனராகப் பொறுப்பேற்ற ஆண்டு?
விடை: 1974
24) தேவநேயப் பாவாணரின் கொள்கைகள் யாவை?
கருத்துபாவாணரின் கொள்கை
முதல் மாந்தன்உலகின் முதல் மாந்தன் தமிழன்
தோன்றிய இடம்தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்
நாகரீகம்மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகம் பழந்தமிழர் நாகரீகம்
25) "செந்தமிழ் ஞாயிறு" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: குன்றக்குடி அடிகளார்
26) "செந்தமிழ் செல்வர்" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: தமிழக அரசால்
27) "தமிழ் பெருங்காவலர்" விருது யாரால் வழங்கப்பட்டது?
விடை: மதுரை தமிழ்ச் சங்கம்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY