தமிழின் தொன்மை & சிறப்புகள் - PART-8

தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 8

11-ம் வகுப்பு: தமிழகக் கல்வி வரலாறு
1) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இலக்கணம் வகுத்த நூல் எது?
விடை: தொல்காப்பியம், நன்னூல்
2) ஓதற்பிரிவு என்றால் என்ன?
விடை: கல்வி கற்பதற்காக பிரிந்து செல்வது (தொல்காப்பியம்)
3) மாணவர்கள் ஆசிரியரிடம் கல்வி கற்றதை விளக்கும் புறநானூற்று வரி எது?
விடை: “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்”
4) இளமையில் கல் என்றவர் யார்?
விடை: ஒளவையார்
5) கல்வி அழகே அழகு என்ற நூல் எது?
விடை: நாலடியார்
6) கல்வியை பற்றி திருமந்திரம் கூறும் வரி என்ன?
விடை: துணையாய் வருவது தூயநற் கல்வி
7) கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளின் பெயர்கள் யாவை?
விடை: ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்
8) கல்வி கற்கும் இடங்கள் (பள்ளி, ஓதும் பள்ளி, கல்லூரி) பற்றி கூறும் நூல்கள் யாவை?
விடை: பள்ளி (பெரிய திருமொழி), ஓதும் பள்ளி (திவாகர நிகண்டு), கல்லூரி (சீவக சிந்தாமணி)
9) சங்க காலத்தில் இருந்த கல்வி சார்ந்த அமைப்புகள் யாவை?
விடை: சங்கம், மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப் பள்ளி
10) பள்ளி என்னும் சொல் எந்த சமயத்தின் கொடையாகும்?
விடை: சமண, பெளத்த
11) பள்ளி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
விடை: படுக்கை
12) சமண சமயத்தின் நான்கு கொடைகள் யாவை?
விடை: கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம்
13) மாணவர் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் எங்குள்ளன?
விடை: திருச்சி மலைக்கோட்டை, கழுகு மலை
14) சங்ககால கல்வி முறைகள் (கணக்காயர், ஆசிரியர், குரவர்) விளக்குக?
விடை: கணக்காயர் (எழுத்து, கணக்கு), ஆசிரியர் (இலக்கணம், இலக்கியம்), குரவர் (சமயம், தத்துவம்), மன்றம் (அரங்கேற்றும் இடம்)
15) பட்டி மண்டபம் பற்றி கூறும் நூல் எது?
விடை: மணிமேகலை
16) பெளத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சீன பயணி யார்?
விடை: யுவான் சுவாங்
17) மரபு வழிக் கல்வி முறைகள் யாவை?
விடை: குருகுலக் கல்வி முறை, திண்ணை பள்ளிக் கல்வி முறை, உயர் நிலைக் கல்வி முறை
18) திண்ணைப் பள்ளிகளை எவ்வாறு அழைத்தனர்?
விடை: தெற்றிப் பள்ளிகள்
19) திண்ணைப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை: கணக்காயர்கள்
20) ஆங்கிலேயர்கள் எவற்றை 'நாட்டுக் கல்வி' என அழைத்தனர்?
விடை: திண்ணைப்பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள்
21) தமிழக திண்ணை பள்ளி முறையை ஸ்காட்லாந்தில் அமைத்தவர் யார்?
விடை: ரெவரென்ட்பெல்
22) ரெவரென்ட்பெல் அமைத்த பள்ளியின் பெயர் என்ன?
விடை: மெட்ராஸ் காலேஜ்
23) உ.வே.சா யாரிடம் உயர் நிலைக் கல்வி பயின்றார்?
விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
24) கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கருக்கும் - நூல் எது?
விடை: திரிகடுகம்
25) அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?
விடை: ஜான் ஹூட்டன் பர்க், 1453, ஜெர்மனி
26) தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?
விடை: டச்சுக்காரர்கள்
27) இந்தியாவில் முதன் முதலில் அச்சு ஏறிய மொழி எது?
விடை: தமிழ் மொழி
28) "ஆசிரியரால் சர்வ வல்லைமையிலும் பாதிப்பு ஏற்படுத்த முடியும்" என்றவர்?
விடை: ஹென்றி ஆடம்ஸ்
29) மெக்காலே கல்வி குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
விடை: 1835
30) இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் எது?
விடை: சார்லஸ் வுட்டின் அறிக்கை, 1854
31) தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்கிய குழு எது?
விடை: ஹண்டர் கல்வி குழு, 1882
32) கட்டாய இலவசக் கல்வி பற்றி கூறும் சட்டம் எது?
விடை: Article 45
33) தமிழகக் கல்வி வளர்ச்சி முக்கிய ஆண்டுகள் (1826-1911) எவை?
விடை: 1826-பொதுக் கல்வி வாரியம், 1835-மருத்துவக்கல்லூரி, 1857-சென்னை பல்கலைக்கழகம், 1910-இடைநிலைக் கல்வி வாரியம்
12-ம் வகுப்பு: தமிழர் குடும்ப முறை
34) உலகச் சமூகம் எதனால் இயங்குகிறது?
விடை: குடும்ப அமைப்பு
35) குடும்ப அமைப்பை எந்த இலக்கியம் மூலம் அறியலாம்?
விடை: சங்க இலக்கியம்
36) மனித சமூகத்தின் அடிப்படை அலகு எது?
விடை: குடும்பம்
37) சமூக அமைப்பு எவ்வாறு விரிவு பெறுகிறது?
விடை: குடும்பம் – குலம் – கூட்டம் – பெருங்குழு – சமூகம்
38) குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை எது?
விடை: திருமணம்
39) தொல்காப்பியத்தில் இடம் பெறாத சொற்கள் யாவை?
விடை: திருமணம், குடும்பம்
40) குடும்பம் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?
விடை: திருக்குறள் (1029)
41) குடும்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை: கூடி வாழ்தல்
42) சங்க இலக்கியத்தில் குடும்ப தொடர்புடைய சொற்கள் யாவை?
விடை: குடம்பை, குடும்பு, கடும்பு
43) எவை குடும்ப அமைப்பை சார்ந்து செயல்படுகின்றன?
விடை: திருமணம், குடும்பம்
44) குடும்பம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது?
விடை: குடும்பு + அம் (விகுதி) சேர்ந்து உருவானது
45) பண்டைத் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் யாவை?
விடை: இல், மனை
46) குடும்ப வாழ்விடங்களின் பெயர்கள் யாவை?
விடை: இல், மனை, குரம்பை, முன்றில், குடில், முற்றம் போன்றவை
47) தற்காலிகத் தங்குமிடத்தின் பெயர் என்ன?
விடை: புக்கில்
48) வாழ்விடத்தைக் குறிக்கும் முதன்மை சொல் எது?
விடை: மனை
49) தனியாக வாழும் இடத்தின் பெயர் என்ன?
விடை: தன்மனை
50) மணந்தகம் என்றால் என்ன?
விடை: கணவனும் மனைவியும் இல்லறம் தொடங்கும் தொடக்க கட்டம்
51) மணந்தகத்தின் கால எல்லை எது வரை?
விடை: முதல் குழந்தை பிறக்கும் வரை
52) தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலை எது?
விடை: மணந்தகம்
53) மணந்தகம் பற்றி கூறும் நூல் எது?
விடை: தொல்காப்பியம்
54) மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல் எது?
விடை: பதிற்றுப்பத்து
55) தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் கூறும் வரிகள் யாவை?
விடை: "இவளது மகன்" என தாயை மையப்படுத்துதல்
56) தாய முறை என்றால் என்ன?
விடை: பெண் திருமணத்திற்குப் பின் தன் இல்லத்திலேயே வாழ்க்கை நடத்துதல்
57) தாய் வழி முறையில் சொத்துக்கள் யாருக்கு சேர்ந்தன?
விடை: பெண்களுக்கு
58) நும்மனை சிலம்பு கழீஇ அயரினும் - நூல் எது?
விடை: ஐங்குறுநூறு (சிலம்புகழி நோன்பு)
59) மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிரே - நூல் எது?
விடை: குறுந்தொகை
60) தந்தை வழிக் குடும்பமுறை வலுவானதை எதன் மூலம் அறியலாம்?
விடை: போர், பொருள்வயின் பிரிவு, சடங்குகள் மூலம்
61) மறியிடைப் படுத்த மான்பிணைப் போல் - நூல் எது?
விடை: ஐங்குறுநூறு
62) எந்தக் குடும்பம் நெருக்கமானது?
விடை: தாய், தந்தை, குழந்தை உள்ள தனிக்குடும்பம்
63) சமூக படிமலர்சியில் இறுதியாக ஏற்பட்டது எது?
விடை: தனிக்குடும்பம்
64) விரிந்த குடும்பம் பற்றி கூறியவர் யார்?
விடை: ஒக்கூர் மாசாத்தியார்
65) நற்றாய் என்பதன் பொருள் என்ன?
விடை: பெற்ற தாய்
66) விரிந்த குடும்பம் என்றால் என்ன?
விடை: கணவன், மனைவி, மகன் உடன் தந்தை சேர்ந்து வாழ்தல்
67) சமூகத் தாயாக விளங்கியவர் யார்?
விடை: செவிலித்தாய்
68) விரிந்த குடும்பம் பற்றி கூறும் நூல் எது?
விடை: தொல்காப்பியம்
69) தமிழர் குடும்ப முறை - கட்டுரையின் ஆசிரியர் யார்?
விடை: பக்தவத்சல பாரதி
70) இக்கட்டுரை எந்த இதழில் வெளிவந்தது?
விடை: பனுவல் (2010)
71) பக்தவத்சல பாரதி எவ்வகை ஆய்வுகளை மேற்கொள்கிறார்?
விடை: மானிடவியல் ஆய்வுகள்
72) அவரின் ஆய்வு எவற்றை உள்ளடக்கியது?
விடை: பழங்குடிகள், நாடோடிகள் பற்றிய விளிம்புநிலை சமூக ஆய்வு
73) பக்தவத்சல பாரதி இயற்றிய நூல்கள் யாவை?
விடை: இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல்

Comments