தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - FINAL PART
தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - FINAL PART
9-ம் வகுப்பு: உலகளாவிய தமிழர்கள்
1) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தீவு எது?
விடை: ரீயூனியன் தீவு
2) உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?
விடை: 235 நாடுகள்
3) உலகில் எத்தனை நாடுகளில் தமிழ் இனம் பரவியுள்ளன?
விடை: 154 நாடுகளில்
4) எந்த நாட்டில் தமிழர்கள் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்?
விடை: இலங்கை
5) தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எது?
விடை: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
6) எந்த நாடுகளில் கோவில் கட்டி இன்றும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன?
விடை: சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு தீவு
7) தமிழர்கள் குடியரசு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட நாடுகள் யாவை?
விடை: சிங்கப்பூர், மலேசியா
கூடுதல் தகவல்கள்
8) கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி - நூல் எது?
விடை: புறப்பொருள் வெண்பாமாலை
9) மொத்தம் உள்ள 235 நாடுகளில் தமிழர்கள் எத்தனை நாடுகளில் உள்ளனர்?
விடை: 154 நாடுகளில்
10) எத்தனை நாடுகளில் இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர்?
விடை: 20 நாடுகளில்
11) திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
விடை: ஔவையார்
12) எந்த நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன?
விடை: சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு தீவு
13) எந்த நாட்டில் வாழும் தமிழருள் 95 சதவீதத்தினர் தமிழ் மொழியில் பயில்கின்றனர்?
விடை: இலங்கை
14) எந்த தீவில் வாழும் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் ஆவர்?
விடை: ரீயூனியன் தீவு
15) ரீயூனியன் தீவில் யாரால் தமிழர்கள் ஒப்பந்த கூலிகளாக பணியமர்த்தப்பட்டார்கள்?
விடை: பிரெஞ்சுகாரர்களால் (புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து)
16) எந்த நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது?
விடை: சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
17) எந்த நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது?
விடை: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
18) எந்த நாடுகளில் தமிழர்கள் தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்புகள் வகிக்கின்றனர்?
விடை: இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
19) எந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
விடை: சிங்கப்பூர், மொரிசியஸ்
20) சாத்துவன் கடல் வாணிகம் மேற்கொண்டான் என்ற குறிப்பு உள்ள நூல் எது?
விடை: மணிமேகலை
Comments
Post a Comment