தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART-4

7, 8, 9-ம் வகுப்பு தமிழ் (பழைய புத்தகம்) - முழுமையான 64 வினாக்கள்

7-ம் வகுப்பு: செம்மொழித்தமிழ் (1-22)
1. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் எவ்வாறு அழைக்கபடுகிறது?
விடை: செம்மொழி
2. செம்மொழியின் வகைகள் யாது?
விடை: கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு
3. தமிழை செம்மொழி என கூறக் காரணம் என்ன?
விடை: மொழிக்கு இலக்கண வரம்பும், சொற்களுக்கு திருந்திய வடிவம் இருப்பதால்
4. எளிதில் பேசவும், பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென் மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்?
விடை: வள்ளலார்
5. தற்போது பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் யாது?
விடை: கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்
6. செம்மொழிகளை பட்டியலிட்ட அறிஞர் யார்?
விடை: ச.அகத்தியலிங்கம்
7. தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் யார்?
விடை: டாக்டர்.கிரௌல்
8. தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளிதட்டு அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் திருக்குறள் என்றவர் யார்?
விடை: டாக்டர்.கிரௌல்
9. உலகின் பழமையான நிலப்பகுதி எது?
விடை: குமரி கண்டம்
10. உலகின் பழமையான நிலப்பகுதி குமரிக்கண்டம் அங்கு தோன்றியது எனக்கூறும் வரி என்ன?
விடை: ஓங்கலிடை வந்துயர்ந்த்தோர் தொழவிளங்கி (தண்டியலங்காரம்)
11. அம்மை, அப்பன் என்ற சொற்கள் எந்த நாட்டு தமிழ் சொற்கள் ஆகும்?
விடை: குமரி நாடு
12. குமரி நாட்டின் மற்றொரு பெயர் என்ன?
விடை: நாஞ்சில் நாடு
13. வாழ்வியலுக்கான பொருள் இலக்கணம் கூறும் மொழி?
விடை: தமிழ் மொழி
14. எல்லா சொற்களும் பொருள் குறித்தனவே –என்ற வரி உள்ள நூல் எது?
விடை: தொல்காப்பியம்
15. தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்- என்று கூறியவர் யார்?
விடை: டாக்டர். கால்டுவெல்
16. சர்வகலாசாலை என்றால் என்ன?
விடை: பல்கலைக்கழகம்
17. தமிழின் தனிப்பெரும் தன்மைகள் மொத்தம் எத்தனை?
விடை: 11
18. தமிழின் தனிப்பெரும் தன்மைகள் யாவை?
விடை: தொன்மை, மென்மை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இயற்க்கை வளர்ச்சி, இலக்கண நிறைவு, செய்யுள் சிறப்பு, அணி சிறப்பு, நூல் சிறப்பு
19. புலவர்கள் செய்யுளுக்கு சிறப்பு சேர்க்க எதை சேர்த்தனர்?
விடை: உவமைகளையும், உருவகங்களையும்
20. பொருள் இலக்கணத்தை எவ்வாறு பிரிக்கலாம்?
விடை: அகம் மற்றும் புறம்
21. தமிழில் இடுகுறி பெயர்கள் அதிகம் உண்டா?
விடை: இல்லை, தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு
22. தமிழில் பால் வேறுபாடு யாருக்கு மட்டும் உண்டு?
விடை: உயிர்களுக்கு மட்டும் பால் வேறுபாடு உண்டு, பொருள்களுக்கு இல்லை
8-ம் வகுப்பு: இலக்கியத்தில் நகைச்சுவை (23-34)
23. நகைச்சுவை உணர்வு இல்லையனில் எபொழுதே தனது வாழ்க்கையை இழந்திருக்க கூடும் என்று கூறியவர் யார்?
விடை: காந்தியடிகள்
24. வள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய காரணங்களால் நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறும் நூல் யாது?
விடை: தொல்காப்பியம்
25. இருபொருள் படும்படி பாடுவதில் வல்லவர் யார்?
விடை: கவி காளமேகம்
26. கவி என்பதன் பொருள் யாது?
விடை: குரங்கு
27. வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகிரெங்கே – என்று பாடியவர் யார்?
விடை: கவிக்காளமேகம்
28. அஞ்சலை அரக்க – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: கம்பராமாயணம்
29. அயலான் வீட்டில் நடப்பதை நகைச்சுவையாக கூறியவர் யார்?
விடை: பாரதிதாசன்
30. மிருதங்கம் வாசிப்பதை நகைச்சுவையாக பாடியவர் யார்?
விடை: அழகிய சொக்கநாதர்
31. மருமக்கள் வழிமான்மியம் என்ற நகைச்சுவை நூலை எழுதியவர் யார்?
விடை: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
32. நாஞ்சில் நாட்டுக் கவிஞர் என்று அழைக்கபடுபவர் யார்?
விடை: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
33. ஆமை வடைக்காய் அரைஞான் பணயம் – எனத் தொடங்கும் பாடல் வரி எந்த நூலில் உள்ளது?
விடை: மருமக்கள் வழிமான்மியம்
34. இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது எது?
விடை: நகைச்சுவை
9-ம் வகுப்பு: திராவிட மொழிகள் (35-64)
35. மொழியின் பயன் யாது?
விடை: தம் எண்ணங்களையும், கருத்துக்களையும் பிறருக்கு அறிவிக்கும் கருவி
36. தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றி வளர அடிப்படையாக உள்ள மொழி எது?
விடை: மூல மொழி
37. மூல மொழியில் இருந்து தோன்றும் மொழிகள் எது?
விடை: கிளை மொழிகள்
38. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழி குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
விடை: நான்கு
39. நான்கு மொழிக்குடும்பங்கள் யாவை?
விடை: 1. இந்தோ-ஆசிய மொழிகள் 2. திராவிட மொழிகள் 3. ஆஸ்திரோ- ஆசிய மொழிகள் 4. சீன – திபெத்திய மொழிகள்
40. இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிக்குடும்பங்கள் உள்ளன?
விடை: 12 மொழிக்குடும்பங்கள்
41. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை?
விடை: 325 மொழிகள்
42. இந்திய நாட்டை மொழிகளின் காட்சி சாலை என்று கூறியவர் யார்?
விடை: ச.அகத்தியலிங்கம்
43. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
விடை: 23 திராவிட மொழிகள் (தற்போது 28)
44. திராவிட மொழிகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
விடை: 3 (தென், நடு, வட திராவிட மொழிகள்)
45. திராவிட பெருமொழிகள் எவை?
விடை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
46. தென் திராவிட மொழிகள் யாவை?
விடை: தமிழ், மலையாளம், குடகு, துளு, கன்னடம், தோடா, கோத்தா, கொரகா, இருளா
47. நடு திராவிட மொழிகள் எவை?
விடை: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு
48. வட திராவிட மொழிகள் யாவை?
விடை: குரூக், மால்தோ, பிராகுய்
49. எந்த நாகரீகம் உலக நாடுகள் அனைத்திற்கும் தாயாக விளங்குகிறது?
விடை: இந்திய நாகரீகம்
50. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: கால்டுவெல்
51. திராவிடம் என்பது ஒரு பெயரிடை என்று கூறியவர் யார்?
விடை: கால்டுவெல்
52. தமிளியன் அல்லது தமுளிக் என்று அழைக்கப்பட்ட மொழிகள் யாவை?
விடை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
53. திராவிடம் என்னும் சொல்லை முதலில் உருவாக்கியவர் யார்?
விடை: குமலரி பட்டர்
54. திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் யார்?
விடை: கால்டுவெல்
55. திராவிடம் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து உருவானது?
விடை: தமிழ் என்ற சொல்
56. தமிழ் > திரமிள > திரவிட > திராவிட என்று உருவானது என்றவர் யார்?
விடை: ஈராஸ் பாதிரியார்
57. திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியைத் தான் குறிக்கும் என்று கூறியவர் யார்?
விடை: ஈராஸ் பாதிரியார்
58. தமிழ் கொண்டுள்ள திராவிட மொழிக்கூறுகளின் சதவீதம் என்ன?
விடை: 80 சதவீதம்
59. தமிழ் மொழியில் மிகப் பழமையான நூல் எது?
விடை: தொல்காப்பியம்
60. திராவிட பெருமொழிகள் பட்டியலில் எந்த மொழி நடுதிராவிட மொழியைச் சார்ந்தது?
விடை: தெலுங்கு
61. கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழர் குமரிக்கண்டம் எது?
விடை: லெமூரியா கண்டம்
62. செய்யுளிசை அளபடை எத்தனை சீர்களில் வரும்?
விடை: இரண்டு சீர்களில் மட்டும் வரும்
63. இன்னிசை அளபெடை எத்தனை சீர்களில் வரும்?
விடை: மூன்று சீர்களில் வரும்
64. பாரதியார் உலக கவி என்ற பாடலை பாடியவர் யார்?
விடை: பாரதிதாசன்

Comments