தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
9-ம் வகுப்பு (பழைய புத்தகம்): ஓய்வும் பயனும்
1) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
விடை: துரை மாணிக்கம்
2) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ஊர் பெயர் என்ன?
விடை: சமுத்திரம் (சேலம் மாவட்டம்)
3) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெற்றோர் யாவர்?
விடை: துரைசாமி - குஞ்சம்மாள்
4) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் காலம் என்ன?
விடை: 10.03.1933 முதல் 11.06.1995 வரை
5) பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
| வகை | நூல்கள் |
|---|---|
| முக்கிய நூல்கள் | கனிச்சாறு, கொய்யாக்கனி, ஐயை |
| பிற நூல்கள் | பாவியக் கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் |
6-ம் வகுப்பு (புதிய புத்தகம்): தமிழ்க்கும்மி
6) 'தமிழ்க்கும்மி' என்ற பாடலை இயற்றியவர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்
7) "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி" என்ற வரியைப் பாடியவர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்
8) 'ஊழி' என்பதன் பொருள் என்ன?
விடை: நீண்டதொரு காலப்பகுதி
9) பெருஞ்சித்திரனார் எந்தப் பெயரால் சிறப்பிக்கப்படுகிறார்?
விடை: பாவலரேறு
10) பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த இதழ்கள் யாவை?
விடை: தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ் நிலம்
11) "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி" பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
விடை: கனிச்சாறு
12) 'கனிச்சாறு' நூல் மொத்தம் எத்தனை தொகுதிகளைக் கொண்டது?
விடை: எட்டு தொகுதிகள்
13) தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
விடை: பெருஞ்சித்திரனார்
14) "வான் தோன்றி, வளி தோன்றி" என்ற வரியைப் பாடியவர் யார்?
விடை: வாணிதாசன்
15) 'மேதினி' என்பதன் பொருள் என்ன?
விடை: உலகம்
10-ம் வகுப்பு (புதிய புத்தகம்): அன்னை மொழியே
16) "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே" வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: கனிச்சாறு
17) "சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்" என்று பாடியவர் யார்?
விடை: க.சச்சிதானந்தன்
18) பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது?
விடை: திருக்குறள் மெய்ப்பொருளுறை
19) பெருஞ்சித்திரனார் இயற்றிய உலகியல் சார்ந்த நூல்கள் யாவை?
விடை: உலகியல் நூறு, பாவியக் கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை என்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப்பறவைகள்.
20) "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே" - இதில் தென்னன் என்பது யாரைக் குறிக்கும்?
விடை: பாண்டிய மன்னன்
21) எட்டுத்தொகை நூல்கள் யாவை?
| வரிசை | நூல் பெயர் |
|---|---|
| 1 & 2 | நற்றினை, குறுந்தொகை |
| 3 & 4 | ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து |
| 5 & 6 | பரிபாடல், கலித்தொகை |
| 7 & 8 | அகநானூறு, புறநானூறு |
Comments
Post a Comment