தமிழின் தொன்மை & திராவிட மொழிகள் - PART 1

தமிழின் தொன்மை-சிறப்பு-திராவிட மொழிகள் (1-55)

6-ம் வகுப்பு தமிழ் - வளர்தமிழ்
1. மனிதரைப் பிற உயிரினங்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுவது எது?
விடை: மொழி
2. உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?
விடை: ஆறாயிரத்திற்கு மேற்ப்பட்ட மொழிகள் உள்ளன
3. மொழியின் வடிவம் என்ன?
விடை: எழுத்து வடிவம், பேச்சு வடிவம்
4. செம்மொழி என்றால் என்ன?
விடை: சில மொழிகள் இலக்கண மற்றும் இலக்கிய வடிவம் பெற்று செம்மொழியாக உள்ளன
5. பாரதியார் தமிழ் மொழியை எவ்வாறு சிறப்பிக்கிறார்?
விடை: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் கானோம்...
6. "என்று பிறந்தவள் என்ற உணராத ...." என்ற வரியை பாடியவர் யார்?
விடை: பாரதியார்
7. தமிழில் மிகப் பழமையான நூல் எது?
விடை: தொல்காப்பியம்
8. தமிழ் உள்ள எழுத்துக்கள் யாவை?
விடை: உயிரும் மெய்யும்
9. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை?
விடை: அ,எ,ஒள,ண,ஞ
10. இடஞ்சுழி எழுத்துக்கள் எவை?
விடை: ட,ய,ழ
11. "தமிழென் கிளவியும் அதனோரற்றே" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: தொல்காப்பியம் (தமிழ் சொல்)
12. "இமிழ்கடல் வேளியைத் தமிழ்நாடு ஆக்கிய ..." என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (தமிழ் நாடு –சொல்)
13. "...தமிழன் கண்டாய் ..." என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
விடை: அப்பர் தேவாரம் (தமிழன் சொல்)
14. சீர்மை என்பதன் பொருள் என்ன?
விடை: ஒழுங்கு முறை
15. உயர்திணையின் எதிர்ச்சொல்லை தாழ்திணை என்னாமல் எவ்வாறு அழைத்தனர்?
விடை: அஃறிணை
16. அஃறிணை - பிரித்து எழுதுக:
விடை: அல் + திணை (உயர்வு அல்லாத திணை)
17. பாகற்காய் - பிரித்து எழுதுக:
விடை: பாகு + அல்+ காய் (இனிப்பு அல்லாத காய்)
18. சங்க இலக்கிய நூல்கள் யாவை?
விடை: எட்டுத் தொகை, பத்துப்பாட்டு
19. தமிழின் பழங்கால இலக்கண நூல்கள் யாவை?
விடை: நன்னூல், தொல்காப்பியம்
20. அறநூல்கள் சில கூறுக?
விடை: திருக்குறள் , நாலடியார்
21. சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன எவ்வாறு அழைக்கபடுகின்றன?
விடை: காப்பியங்கள்
22. "மா" என்னும் சொல்லின் பொருள்கள் யாவை?
விடை: மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
23. தமிழ் மொழியின் வகைகள் யாவை?
விடை: இயல்தமிழ் (எண்ணம்), இசைத்தமிழ் (உள்ளம்), நாடகத் தமிழ் (உணர்வு)
24. தமிழ்க் கவிதையின் வடிவங்கள் யாவை?
விடை: துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
25. தமிழ் உரைநடை வடிவங்கள் யாவை?
விடை: கட்டுரை, புதினம், சிறுகதை
26. தமிழின் தற்போதைய நடைமுறை வடிவங்கள் யாவை?
விடை: அறிவியல் தமிழ், கணினித்தமிழ்
27. தாவர இலைப் பெயர்கள்
தாவரங்கள்இலைப் பெயர்
ஆல், அரசு, மா, பலா, வாழைஇலை
அகத்தி, பசலை, முருங்கைகீரை
அருகு, கோரைபுல்
நெல், வரகுதாள்
மல்லிதழை
சப்பாத்திக் கள்ளி, தாழைமடல்
கரும்பு, நாணல்தொகை
பனை, தென்னைஓலை
கமுகுகூந்தல்
28. தமிழின் புதிய கலைச் சொற்கள் யாவை?
விடை: இணையம், முகநூல், புலனம், குரல் தேடல், தேடு பொறி, செயலி, தொடுதிரை
29. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தைப் பெற்ற மொழி எது?
விடை: தமிழ்
30. "நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்" என்ற வரியைப் பாடியவர்?
விடை: அறிவுமதி
7-ம் வகுப்பு - பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
31. சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது?
விடை: மொழியின் மூலமாக
32. மொழியின் வடிவங்கள் யாவை?
விடை: பேச்சு மொழி (முதல் நிலை), எழுத்து மொழி (இரண்டாம் நிலை)
33. உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது?
விடை: பேச்சு மொழி
34. நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது?
விடை: எழுத்து மொழி
35. சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் எனக் கூறும் நூல்?
விடை: நன்னூல் ("எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்...")
36. "எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவதும் மொழியே" என்றவர் யார்?
விடை: மு. வரதராசனார்
37. வட்டார மொழிக்கு எடுத்துக்காட்டு கூறுக?
விடை: இருக்கிறது – இருக்கு, இருக்குது, கீது
38. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் யாவை?
விடை: மலையாளம், கன்னடம், தெலுங்கு
39. உலக வழக்கு என்பது?
விடை: பேச்சு மொழி (உதாரணம்: நல்லாச் சாப்ட்டான்)
40. இலக்கிய வழக்கு என்பது?
விடை: எழுத்து மொழி (உதாரணம்: நன்றாகச் சாப்பிட்டான்)
41. உலக வழக்கு, செய்யுள் வழக்கு என வேறுபாட்டைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார்?
விடை: பேச்சு வழக்கு (உலக வழக்கு), எழுத்து வழக்கு (செய்யுள் வழக்கு)
42. எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிற்கு இடமில்லை?
விடை: எழுத்து மொழி
43. எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம் மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை?
விடை: பேச்சு மொழி
44. குழந்தைக்குத் தாய்மொழி எவ்வாறு அறிமுகமாகிறது?
விடை: கேட்டல், பேசுதல் மூலமாக
45. குழந்தைக்குப் பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது?
விடை: படித்தல், எழுதுதல் மூலமாக
46. இரட்டை வழக்கு மொழி எது?
விடை: தமிழ்
47. பேச்சு மொழியில் எழுத்துகள் மாற்றி ஒலிப்பதற்கான உதாரணங்கள் கூறுக?
விடை: இலை – எல, உலகம் – ஒலகம்
48. எதில் இன்றும் எழுத்துத் தமிழ் பயன்பட்டு வருகிறது?
விடை: நாளேடு, பருவ இதழ்கள்
49. “எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” என்ற ஆசை கொண்டவர் யார்?
விடை: பாவேந்தர் பாரதிதாசன்
50. “அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்” - இதன் எழுத்து மொழி வடிவம்?
விடை: அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.
51. சொல்லு, வந்தியா, நில்லு - இவற்றின் சரியான வடிவம்?
விடை: சொல், வந்தாயா, நில்
52. மொழியின் முதல் நிலை பேசுதல் மற்றும் _______ ஆகும்.
விடை: கேட்டல்
53. ஒலியின் வரிவடிவம் _______ ஆகும்.
விடை: எழுத்து
54. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _____?
விடை: தெலுங்கு
55. பேச்சு மொழியை _______ வழக்கு என்றும் கூறுவர்.
விடை: உலக வழக்கு

Comments