தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாரதிதாசன் (PART-1)
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - பாரதிதாசன் (PART-1)
6-ம் வகுப்பு (புதிய புத்தகம்): இன்பத் தமிழ்
1) தமிழைப் பல விதங்களில் போற்றியவர் யார்?
விடை: பாரதிதாசன்
2) செந்தமிழுக்கு பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர் யார்?
விடை: பாரதிதாசன்
3) "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற வரியைப் பாடியவர் யார்?
விடை: பாரதிதாசன்
4) 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன?
விடை: உருவாக்கிய
5) 'விளைவு' என்பதன் பொருள் என்ன?
விடை: விளைச்சல்
6) உயிருக்கு இணையானது எது என்று பாரதிதாசன் கூறுகிறார்?
விடை: அமுதம் போன்ற தமிழ்
7) இளமைக்கு காரணமான தமிழ் எது போன்றது?
விடை: பால் போன்றது
8) உயர்விற்கு எல்லையாகிய தமிழ் எது போன்றது?
விடை: வானம் போன்றது
9) அறிவுக்குத் துணை கொடுக்கும் தமிழ் எது போன்றது?
விடை: தோள் போன்றது
10) சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான தமிழ் எது போன்றது?
விடை: நீர் போன்றது
11) பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: கனக சுப்புரத்தினம்
12) பாரதிதாசன் தன் பெயரை மாற்றிக்கொள்ளக் காரணம் யார்?
விடை: பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக
13) பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் யாவை?
விடை: பாவேந்தர், புரட்சிக்கவி
14) பாரதிதாசனின் பாடல்களில் உள்ள பகுத்தறிவுக் கருத்துக்கள் யாவை?
விடை: பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு.
15) "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா" - பாடியவர் யார்?
விடை: கவிஞர் காசி ஆனந்தன்
16) 'செம்பயிர்' - பிரித்து எழுதுக?
விடை: செம்மை + பயிர்
7-ம் வகுப்பு (புதிய புத்தகம்): இன்பத்தமிழ்க் கல்வி
17) "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட" என்ற வரியைப் பாடியவர் யார்?
விடை: பாவேந்தர் பாரதிதாசன்
18) எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கிவிடும் என்று பாவேந்தர் கூறுகிறார்?
விடை: இன்பத்தமிழ்க் கல்வியை
19) 'வெற்பு' என்பதன் பொருள் என்ன?
விடை: மலை
20) 'கழனி' என்பதன் பொருள் என்ன?
விடை: வயல்
21) 'அன்னதோர்' என்பதன் பொருள் என்ன?
விடை: அப்படி ஒரு
22) 'இன்பத்தமிழ்க் கல்வி' பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?
விடை: பாரதிதாசன் கவிதைகள் (தலைப்பு: தமிழ்ப்பேறு)
23) பாரதிதாசன் எதனைப் படைப்பதில் வல்லவர்?
விடை: கவிதை, கதை, கட்டுரை, நாடகம்.
24) பாரதிதாசன் இயற்றிய சில நூல்களைக் கூறுக?
விடை: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, இசையமுது, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம்.
25) பாரதிதாசன் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
விடை: பிசிராந்தையார் (நாடக நூல்)
26) பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் எதனைக் கூறுகிறார்?
விடை: மயில்
Comments
Post a Comment