தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - ஜி.யூ.போப்

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - ஜி.யூ.போப்

9-ம் வகுப்பு (பழைய புத்தகம்) & கூடுதல் தகவல்கள்
1) ஜி.யூ.போப் என்பதன் விரிவாக்கம் மற்றும் அவர் பிறந்த இடம் எது?
விடை: ஜியார்ஜ் யுக்ளோ போப். இவர் 1820-ல் பிரான்சில் உள்ள எட்வர்ட் தீவில் பிறந்தார்.
2) ஜி.யூ.போப்பின் பெற்றோர் மற்றும் தமையனார் யார்?
விடை: பெற்றோர்: ஜான் போப் - கேத்தரின். தமையனார்: ஹென்றி.
3) ஜி.யூ.போப் தமிழகம் வந்த பயணம் குறித்துக் கூறுக?
விடை: இவர் 1839-ல் தனது 19-வது வயதில் தமிழகம் வந்தார். பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர எட்டுத் திங்கள் (8 மாதங்கள்) ஆனது.
4) ஜி.யூ.போப் தமிழகத்தில் பணியாற்றிய இடங்கள் யாவை?
ஆண்டுகள்இடம்பணி / குறிப்பு
1839சாந்தோம் (சென்னை)முதலில் சமயப்பணி ஆற்றிய இடம்
1842 - 1849சாயர்புரம் (தூத்துக்குடி)7 ஆண்டுகள் பணியாற்றினார்
1850 - 1858தஞ்சாவூர்8 ஆண்டுகள் பணியாற்றினார்
1858உதகமண்டலம்பள்ளி ஒன்றைத் தொடங்கினார்
5) சாயர்புரத்தில் ஜி.யூ.போப் மாணவர்களுக்குக் கற்பித்தவை யாவை?
விடை: கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்).
6) தஞ்சையில் பணியாற்றிய காலத்தில் ஜி.யூ.போப் பயின்ற நூல்கள் யாவை?
விடை: புறநானூறு, நன்னூல், திருக்குறள், திருவாசகம், நாலடியார்.
7) ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் யாவை?
நூல்ஆண்டுகுறிப்பு
திருக்குறள்188666-வது வயதில் (40 ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்)
திருவாசகம்190080-வது வயதில் வெளியிட்டார்
நாலடியார்-ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
8) ஜி.யூ.போப் பதிப்பித்த தமிழ் நூல்கள் யாவை?
விடை: புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன்.
9) 600 செய்யுள்கள் கொண்ட 'தமிழ் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
விடை: ஜி.யூ.போப்
10) ஜி.யூ.போப் வெளியிட்ட அகராதிகள் யாவை?
விடை: தமிழ் - ஆங்கில அகராதி, ஆங்கிலம் - தமிழ் அகராதி.
11) ஜி.யூ.போப் தனது ஆராய்ச்சி கட்டுரைகளை எந்த இதழ்களில் வெளியிட்டார்?
விடை: இந்தியன் சஞ்சிகை (The Indian Antiquary), இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
12) இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராகப் பணியாற்றிய காலம்?
விடை: 1885 முதல் 1908 வரை (23 ஆண்டுகள்) - ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்.
13) ஜி.யூ.போப் எப்பொழுது இறைவனடி சேர்ந்தார்?
விடை: 1908, பிப்ரவரி 11.
14) "இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" - என்று யாருடைய கல்லறையில் எழுதப்பட்டுள்ளது?
விடை: ஜி.யூ.போப். (தம் கல்லறையில் இவ்வாறு எழுதச் சொன்னவர் இவரே).
15) "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
விடை: ஜி.யூ.போப்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY