தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - காயிதே மில்லத்

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - காயிதே மில்லத்

1) கண்ணியமிகு தலைவர் யார்?
விடை: முகமது இஸ்மாயில்
2) முகமது இஸ்மாயிலை மக்கள் எவ்வாறு அன்புடன் அழைத்தனர்?
விடை: காயிதே மில்லத்
3) காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு என்ன பொருள்?
விடை: சமுதாய வழிகாட்டி
4) காயிதே மில்லத் காந்தியடிகளின் எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்?
விடை: ஒத்துழையாமை இயக்கம்
5) காயிதே மில்லத் எந்தக் கல்லூரியில் படித்தார்?
விடை: திருச்சி தூயவளனார் கல்லூரி
6) காயிதே மில்லத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதைப் பயன்படுத்தினார்?
விடை: பேருந்து மற்றும் தொடர் வண்டி
7) மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர் யார்?
விடை: காயிதே மில்லத்
8) இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
விடை: காயிதே மில்லத்
9) இந்தியா சீனாப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
விடை: 1962 ஆம் ஆண்டு
10) இந்தியா சீனாப் போரின் போது பிரதமராக இருந்தவர் யார்?
விடை: ஜவகர்லால் நேரு
11) தன் ஒரு மகனைப் போருக்கு அனுப்ப நேருவிற்கு கடிதம் எழுதியவர் யார்?
விடை: காயிதே மில்லத்
12) காயிதே மில்லத் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் என்ன?
விடை: 1946 முதல் 1952 வரை
13) இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் யார்?
விடை: காயிதே மில்லத்
14) காயிதே மில்லத் பற்றி பெரியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறுகிறார்?
விடை: "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்"
15) காயிதே மில்லத் பற்றி அண்ணா எவ்வாறு சிறப்பித்துக் கூறுகிறார்?
விடை: தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகத் திகழ்கிறார்.
16) "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்ற முதுமொழிக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் யார்?
விடை: காயிதே மில்லத்
17) திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி தொடங்கக் காரணமாக விளங்கியவர் யார்?
விடை: காயிதே மில்லத்
18) காயிதே மில்லத் எந்தப் பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?
விடை: எளிமை
19) காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள் யாது?
விடை: சமுதாய வழிகாட்டி
20) விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்?
விடை: ஒத்துழையாமை இயக்கம்
21) காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது?
விடை: நாடாளுமன்றம்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY