தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - கண்ணதாசன்
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - கண்ணதாசன்
பகுதி 1: மலைப்பொழிவு (7-ம் வகுப்பு புதிய புத்தகம்)
1) இயேசு காவியத்தை இயற்றியவர் யார்?
விடை: கண்ணதாசன்
2) 'தாரணி' என்பதன் பொருள் என்ன?
விடை: உலகம்
3) சாந்தம் உடையவர்கள் என்னவாக உருவாகுவார்கள்?
விடை: தலைவர்களாக
4) பொறுமை எதை ஆட்சி செய்யும் என்று இயேசு நாதர் கூறுகிறார்?
விடை: மண்ணையும், விண்ணையும்
5) பொருள் ஈட்டுதலில் எவ்வழியைப் பின்பற்ற வேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்?
விடை: அற வழியைப் பின்பற்ற வேண்டும்
6) இறைவனின் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்?
விடை: பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம்
7) மனிதன் வாழ்வு பாலைவனம் போல் எப்பொழுது மாறும்?
விடை: மனிதன் ஆசையில் விழுந்து விட்டால்
8) மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது மாறும்?
விடை: நல்ல உள்ளத்தோடு வாழும் போது
9) எப்பொழுது இதயம் மலையளவு உயரும்?
விடை: போட்டிகளின்றி அமைதியாக வாழும் பொழுது
10) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: முத்தையா
11) கவியரசு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
விடை: கண்ணதாசன்
12) கண்ணதாசன் இயற்றிய பல்வேறு வகை நூல்கள் யாவை?
விடை: காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள்
13) தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் யார்?
விடை: கண்ணதாசன்
14) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?
விடை: இயேசு காவியம்
15) மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது?
விடை: பொறுமை
16) சாந்த குணம் உடையவர்கள் ____ முழவதையும் பெறுவர்?
விடை: உலகம்
பகுதி 2: காலக்கணிதம் (10-ம் வகுப்பு புதிய புத்தகம்)
17) அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் என்றவர் யார்?
விடை: கண்ணதாசன்
18) காலக்கணிதம் என்ற கவிதை எதில் இடம் பெற்றுள்ளது?
விடை: கண்ணதாசன் கவிதைத்தொகுப்பு
19) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: முத்தையா
20) கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தார்?
விடை: சிறுகூடல்பட்டி, சிவகங்கை
21) கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
விடை: சாத்தப்பன், விசாலாட்சி
22) கண்ணதாசனின் முதல் பாடல் எது?
விடை: கலங்காதிரு மனமே (1949)
23) திரைப்பட பாடல்கள் வழியாக எதனை மக்களிடம் சேர்த்தார்?
விடை: மெய்யியல் (தத்துவம்)
24) கண்ணதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
விடை: சேரமான் காதலி
25) "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை" - வரியைக் கூறியவர்?
விடை: கண்ணதாசன்
26) "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" - வரியைக் கூறியவர்?
விடை: கம்பன்
பகுதி 3: கவியின்பம் (9-ம் வகுப்பு பழைய புத்தகம்)
27) "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" என்ற வரியைப் பாடியவர்?
விடை: கண்ணதாசன்
28) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
விடை: முத்தையா
29) கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
விடை: சாத்தப்பன், விசாலாட்சி
30) கண்ணதாசன் எங்கு எப்போது பிறந்தார்?
விடை: சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி, 24-06-1927
31) "பசுமை நிறைந்த நினைவுகளே" என்ற வரியைக் கூறியவர் யார்?
விடை: கண்ணதாசன்
32) கண்ணதாசனின் முக்கிய காவிய நூல்கள் யாவை?
விடை: ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்குடி மகாகாவியம், இயேசு காவியம்
33) "அழகு தெய்வம் மெல்ல மெல்ல" என்ற வரியைக் கூறியவர் யார்?
விடை: கண்ணதாசன்
34) "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என்று பாடியவர் யார்?
விடை: கண்ணதாசன்
35) கண்ணதாசன் இயற்றிய நாடகம் எது?
விடை: ராசதண்டனை
36) கண்ணதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?
விடை: சேரமான் காதலி
37) கண்ணதாசனின் புதினங்கள் யாவை?
விடை: ஆயிரம் தீவு அங்கயர்கன்னி, வேலங்குடி திருவிழா
38) கண்ணதாசன் நடத்திய இதழ்கள் யாவை?
விடை: தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ் மலர்
39) "நான் நிரந்தமானவன் அழிவதில்லை" என்று கூறியவர் யார்?
விடை: கண்ணதாசன்
Comments
Post a Comment