நாலடியார்-நான்மணிக்கடிகை-பழமொழி நானூறு

நாலடியார்-நான்மணிக்கடிகை-பழமொழி நானூறு

நாலடியார்
1. “நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கனிய ராயினும்”- என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது? விடை: நாலடியார்
2. நாலடியார் நூல் அமைப்பு யாது? விடை: அறத்துப்பால் 13, பொருட்பால் 24, காமத்துப்பால் 3, மொத்தம் 40
3. நாலடியாருக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்? விடை: பதுமனார்
4. நாலடியார் யாருடைய பாடல்களின் தொகுப்பு ஆகும்? விடை: சமண முனிவர்கள்
5. நாலடியாரின் வேறு பெயர்கள் என்ன? விடை: சாம வேதம், வேளாண் வேதம், நாலடி நானூறு
6. நாலடியார் எந்த நூலின் கீழ் வரும்? விடை: பதினெண்கீழ்க்கணக்கு
7. நாலடியாரில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன? விடை: 400
8. சங்க காலத்திற்கு பின் தோன்றிய நூல்கள் யாது? விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது? விடை: நாலடியார்
10. நாலடியார் நூலின் பா வகை என்ன? விடை: வெண்பா
11. நாலடியாரை தொகுத்து அதிகாரம் வகுத்தவர் யார்? விடை: பதுமனார்
12. நாலடியாரை முப்பாலாக பகுத்தவர் யார்? விடை: தருமர்
13. வைப்புழிக் கோட்படா என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விடை: நாலடியார்
14. நாலடியார் எந்த நூலுக்கு இணையாக வைத்து போற்றப்படுகிறது? விடை: திருக்குறள்
15. வைப்புழி என்றால் என்ன? விடை: பொருள் சேமித்து வைக்கும் இடம்
16. ஒருவர் தம் குழந்தைக்கு சேர்க்க வேண்டிய செல்வம் எது? விடை: கல்வி
17. விச்சை என்பதன் பொருள் என்ன? விடை: கல்வி
18. திருக்குறளுக்கு இணையாக நாலடியார் போற்றப்படுவதை எந்த தொடரின் மூலம் அறியலாம்? விடை: நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
நான்மணிக்கடிகை
19. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விடை: விளம்பிநாகனார்
20. துண்டு என்ற சிறப்பு பெயர் கொண்ட நூல் எது? விடை: நான்மணிக்கடிகை
21. ஓதின் புகல்சால் உணர்வு என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விடை: நான்மணிக்கடிகை
22. கடிகை என்றால் என்ன? விடை: அணிகலன்
23. மனைக்கு விளக்கம் மடவாள் என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விடை: விளம்பி நாகனார்
24. விளம்பி என்பது என்ன? விடை: ஊர் பெயர்
25. மடவாள் என்பன் பொருள் என்ன? விடை: பெண்
26. நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறக்கருத்துக்களை கூறுகின்றன? விடை: நான்கு
27. தகைசால் என்பதன் பொருள் என்ன? விடை: பண்பில் சிறந்த
28. நான்மணிக்கடிகை என்பதன் பொருள் என்ன? விடை: நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
29. நான்மணிக்கடிகை எந்த நூலின் கீழ் வரும்? விடை: பதினெண்கீழ்க்கணக்கு
30. புகழ்சால் என்பதன் பொருள் என்ன? விடை: புகழைத் தரும்
பழமொழி நானூறு
31. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விடை: பழமொழி நானூறு
32. பழமொழி நானூறின் ஆசிரியர் யார்? விடை: முன்றுறை அரையனார்
33. ஆற்றுணா வேண்டுவது இல் என்ற வரி இடம் பெற்ற நூல் எது? விடை: பழமொழி நானூறு
34. வழி நடை உணவு இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை: கட்டுச்சோறு
35. ஆறு என்பதன் பொருள் என்ன? விடை: வழி
36. உணா என்பதன் பொருள் என்ன? விடை: உணவு
37. பழமொழி நானூறு எந்த வகை நூல்களில் ஒன்று? விடை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
38. பழமொழி நானூறில் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை பழமொழி இடம் பெற்றுள்ளது? விடை: ஒன்று
39. பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? விடை: நானூறு
40. ஆற்றுணா வேண்டுவது இல் என்பதன் பொருள் என்ன? விடை: கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்
41. முன்றுறை என்பது ___ பெயர் விடை: ஊர்
42. அரையன் என்ற சொல் குறிப்பது என்ன? விடை: அரசன் அல்லது புலவரின் குடிப்பெயர்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY