உவமைத் தொடர்களின் பொருள் அறிதல்
தமிழ்: உவமைத் தொடர்கள்
பொருளைக் காண அட்டையைத் தொடவும்தாமரை இலை தண்ணீர் போல
பற்றின்மை
மழை முகம் காணாப் பயிர் போல
வருத்தம்
கண்ணிணை காக்கும் இமை போல
பாதுகாத்தல்
சிலைமேல் எழுத்து போல
நிலைத்திருத்தல்
வெள்ளம் போன்ற இன்பம்
மிகுந்த இன்பம்
கடல் போன்ற கவலை
மிகுந்த கவலை
தேன் போன்ற மொழி
இனிமையான மொழி
வில் போன்ற புருவம்
கூர்மையானது
செந்தமிழும் சுவையும் போல
ஒற்றுமை
அற்புதம் போல
அரிய நிகழ்வு
மழை காணாப் பயிர் போல
வாட்டம், வறட்சி
உள்ளங்கை நெல்லிக்கனி போல
வெளிப்படைத் தன்மை
பசுமரத்தாணி போல
எளிதில் மனதில் பதிதல்
கண்ணை இமை காப்பது போல
பாதுகாப்பு
தாயைக் கண்ட சேயைப் போல
மகிழ்ச்சி
இஞ்சி தின்ற குரங்கு போல
தவிப்பு / விழித்தல்
நகமும் சதையும் போல
ஒற்றுமை / பிரியாமை
எலியும் பூனையும் போல
பகை
குடத்தில் இட்ட விளக்கு போல
மறைந்துள்ள திறமை
குன்றின் மேல் இட்ட விளக்கு போல
வெளிச்சம், பயன்
கிணற்றுத் தவளை போல
அறியாமை
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தன் கையில் இருக்கும் பொருள்
பசுமரத்து ஆணி போல
தெளிவாக
அச்சாணி இல்லாத தேர்போல
சரியான வழிகாட்டி இல்லாமை
காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல
தற்செயல் நிகழ்வு
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல
எதிர்பாரா நிகழ்வு
விழுலுக்கு இறைத்த நீர் போல
பயனற்ற செயல்
நெல்லிக்காய் மூட்டையை கொட்டினாற்போல
ஒற்றுமையின்மை
Comments
Post a Comment