தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-4


எண்பழமொழிவிளக்கம்
1அகத்தின் அழகு முகத்தில் தெரியும்மனத்தில் இருப்பதை முகம் காட்டும்; மனதின் பிரதிபலிப்பு.
2அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதுமுக்கியமானவர் இன்றி எக்கருமமும் நடைபெறாது.
3அஞ்சுக்கு இரண்டு பழுதில்லைஆற்றாமை.
4அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குஒற்றுமையே பலம்.
5அடி உதவுவதுபோல அண்ணன்தம்பி உதவமாட்டார்கள்பலவந்தம்.
6அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமும்வஞ்சகம்; பாசாங்கு (பொய்யான நடிப்பு), உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்.
7அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்விடாமுயற்சி வெற்றி அளிக்கும்.
8அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்விதி.
9அத்திப் பூ போலஅருமை.
10அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிராக வரும்தேடல்.
11அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினிபொறாமை.
12அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்அச்சம்.
13அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணுசைவ வைணவ வேறுபாடின்மை.
14அருமையற்ற வீட்டில் எருமையுங் குடியிராதுஅன்பு, சுத்தம், மரியாதை.
15அரைக்காசுக்கு அழிந்த கற்பு 1000 பொன் கொடுத்தாலும் வராதுகற்பின் பெருமை.
16அவசரக்காரனுக்குப் புத்தி மட்டுஆத்திரம்; பொறுமையின்மை.
17அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறதுஅதிர்ஷ்டம்.
18அவன் சிறகொடிந்த பறவைநொந்துபோதல்.
19அழுதுபிள்ளை பால் குடிக்கும் / அழுகிற பிள்ளை பால் குடிக்கும்முயற்சி.
20அழையாத வீட்டில் நுழையாதேமரியாதை.
21அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுஎதையும் அளவோடு அனுபவித்தல் வேண்டும்.
22அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்சோம்பல்.
23அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்கஞ்சத்தனம்.
24அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்சிறியது பெரியவற்றைக் கெடுக்கும்.
25அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்உண்மை நட்பு.
26அன்று எழுதியவன் அழித்தெழுத போவதில்லைவிதி.
27அஞ்சு பைசா குதிரையும் வேண்டும் ஆறு கடக்கவும் வேண்டும்பேராசை.

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY