உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-7

 

எண்உவமைத் தொடர்பொருள்
1எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போலவேதனையைத் தூண்டுதல், தூண்டிவிடல்
2எமன் கையில் அகப்பட்ட உயிர் போலஅகப்படுதல், தப்பிக்க முடியாமை, மாட்டிக்கொள்ளுதல்
3எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நின்றது போலமதிப்பு இல்லாத விஷயத்திற்காகச் சண்டையிட்டுக் கொள்ளுதல்
4எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டது போலதிருப்தி அடைய முயல்வது
5எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போலவீணாய்ப் போதல், பயனின்மை
6எட்டாப் பழுத்துக்குத் கொட்டாவி விட்டது போலஏக்கம்
7எட்டாப் பழம்  புளித்தது போலஏமாற்றம், குறைக் கூறுதல் 
8எட்டிப் பழுத்தாற் போலபயனின்மை
9எட்பகவு  போலசிறுமை  
10எடுப்பார் கைப்பிள்ளை போலசுயநிலை அற்றோர்
11எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகாதது போலமாறாத குணம்
12எமன் கையிலிருந்து மீண்டது போலஅதிர்ஷ்டம்
13எரிபடுப் பஞ்சு போலஅழிந்து போதல், கெடுதல்
14எரிகின்ற கொள்ளியை ஏறத்  தள்ளினது போலவேதனையைத் தூண்டுதல்
15எரிமண்டிக் கானந் தலைப்பட்ட தீப்போலபெருங்கோபம்
16எரிமுன்னர் வைத்தூறு  போலஅழிவு
17எலிக்குப் பயந்து  வீட்டுக்குத் தீ வைத்தது போலமுட்டாள்தனம்
18எலுமிச்சங் காய்க்கு  புளிப்பு ஏற்றினாற் போலவீண்வேலை  
19எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்தது போலபயன் அற்றது
20எள்ளும் பச்சை அரிசியும் போலவேற்றுமை
21எள்ளினில் எண்ணெய் போலஒளிந்திருத்தல், மறைவு
22ஏழை கண்ட பெருந்தனம் போலமகிழ்ச்சி
23ஏழை பெற்ற செல்வம் போலமகிழ்ச்சி
24ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது போலமுற்றிலும் பயன்படாமை
25ஏகாதசிக்கு மா இடித்தாற் போலபயன் அற்றது
26ஏற விட்டு ஏணியை வாங்கினாற் போலஏமாற்றுவது, வஞ்சிப்பது, பாதியில் தவிக்க விடுவது, விட்டுக் கெடுத்தல்
27ஏறா மடைக்கு நீர் பாய்ச்சியது போலவீண் முயற்சி
28ஏணி தோணி நார்த்தங்காய் போலதியாகம்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY