8ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

8-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும்

பொருளை அறிய அட்டையைத் தொடவும்
நிரந்தரம்
காலம் முழுமையும்
வண்மொழி
வளமிக்க மொழி
வைப்பு
நிலப்பகுதி
இசை
புகழ்
சூழ்கலி
சூழ்ந்துள்ள அறியாமை இருள்
தொல்லை
பழமை, துன்பம்
விசும்பு
வானம்
மரபு
வழக்கம்
மயக்கம்
கலவை
திரிதல்
மாறுபடுதல்
இருதிணை
உயர்திணை, அஃறிணை
செய்யுள்
பாட்டு
வழாஅமை
தவறாமை
தழாஅல்
தழுவுதல்
ஐம்பால்
ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் பால்
தூண்டுதல்
ஆர்வம்கொள்ளுதல்
பயிலுதல்
படித்தல்
ஈரம்
இரக்கம்
நாணம்
வெட்கம்
முழவு
இசைக்கருவி
செஞ்சொல்
திருந்திய சொல்
நன்செய்
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
புன்செய்
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
வள்ளைப்பாட்டு
நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
முகில்
மேகம்
வின்னம்
சேதம்
கெடிகலங்கி
மிக வருந்தி
வாகு
சரியாக
சம்பிரமுடன்
முறையாக
காலன்
எமன்
சேகரம்
கூட்டம்
மெத்த
மிகவும்
காங்கேய நாடு
கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
தீர்வன
நீங்குபவை
திறத்தன
தன்மையுடையன
உவசமம்
அடங்கி இருத்தல்
கூற்றவா
பிரிவுகளாக
நிழல்இகழும்
ஒளிபொருந்திய
பூணாய்
அணிகலன்களை அணிந்தவளே
பேர்தற்கு
அகற்றுவதற்கு
பிணி
துன்பம்
திரியோகமருந்து
மூன்று யோகமருந்து
ஓர்தல்
நல்லறிவு
தெளிவு
நற்காட்சி
பிறவார்
பிறக்கமாட்டார்
நித்தம் நித்தம்
நாள்தோறும்
வையம்
உலகம்
மட்டு
அளவு
பேணுவயல்
பாதுகாத்தல்
சுண்ட
நன்கு
திட்டுமுட்டு
தடுமாற்றம்
கலன்
அணிகலன்
முற்ற
ஒளிர
வேண்டாவாம்
தேவையில்லை
தடம்
அடையாளம்
அகம்பாவம்
செருக்கு
புத்தி
அறிவு
பாதை
வழி / அறிவு
உள்ளம்
மனம்
லாபம்
பலன்
எண்ணி
நினை
பண்
இசை
கனகச்சுனை
பொன் வண்ண நீர்நிலை
மதவேழங்கள்
மதயானைகள்
முரலும்
முழங்கும்
பழவெய்
முதிர்ந்த மூங்கில்
அலந்தவர்
வறியவர்
செறாஅமை
வெறுக்காமை
கிளை
உறவினர்
பேதையார்
அறிவற்றவர்
நோன்றல்
பொறுத்தல்
மறாஅமை
மறவாமை
போற்றார்
பகைவர்
பொறை
பொறுமை
வாரி
வருவாய்
எஞ்சாமை
குறைவின்றி
முட்டாது
தட்டுப்பாடின்றி
ஒட்டாது
வாட்டம் இன்றி
வைகுக
தங்குக
ஓதை
ஓசை
வெரீஇ
அஞ்சி
யாணர்
புதுவருவாய்
மறலி
காலன் / எமன்
வழிவர்
நழுவி ஓடுவர்
கரி
யானை
பிலம்
மலைக்குகை
தூறு
புதர்
மண்டுதல்
நெருங்குதல்
அருவர்
தமிழர்
இறைஞ்சினர்
வணங்கினர்
உடன்றன
சினந்து எழுந்தன
முழை
மலைக்குகை
சீவன்
உயிர்
சத்தியம்
உண்மை
சபதம்
சூளுரை
ஆனந்த தரிசனம்
மகிழ்வான காட்சி
மோகித்து
விரும்பி
நமன்
எமன்
நாணாமே
கூசாமல்
சித்தம்
உள்ளம்
உய்ம்மின்
ஈடேறுங்கள்
நம்பர்
அடியார்
ஈயில்
வழங்கினால்
படமாடக்கோயில்
படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
பகராய்
தருவாய்
பராபரம்
மேலான பொருள்
ஆனந்த வெள்ளம்
இன்பப்பெருக்கு
அறுத்தவருக்கு
நீக்கியவர்க்கு
நிறை
மேன்மை
அழுக்காறு
பொறாமை
பொறை
பொறுமை
மதம்
கொள்கை
பொச்சாப்பு
சோர்வு
இகல்
பகை
மையல்
விருப்பம்
மன்னும்
நிலைபெற்ற
ஓர்ப்பு
ஆராய்ந்து தெளிதல்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY