உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-4

 

எண்உவமைத் தொடர்பொருள்
1ஆடுங்கறங்குத்  திரிகையும் போலசிக்கித் தவித்தல், தடுமாறி அலைதல்
2ஆப்பறைந்த மரம் போலஉறுதி
3ஆமை திடரில் ஏறினாற் போலமிகவும் கடினமான செயல்
4ஆயும் மலர்த் தேன் வண்டருந்துவது போலவருத்தாமல் பயன்பெறுதல்
5ஆல விழுது தாங்கி நிற்பது போலஆதரவு, பாதுகாப்பு
6ஆலையில் அகப்பட்ட கரும்பு போலதுன்பம், மீள முடியாத துன்பம்
7ஆவிற்கு இரு கோடு போலஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது
8ஆவேறு உருவினதாயினும் ஆபந்த பால் வேறு உருவினவல்லாதது போலஒரே தன்மை; வேற்றுமையில் ஒற்றுமை
9ஆழம் தெரியாமல் காலை விட்டது போலதிட்டமிடலாமை; ஆராயாமை
10ஆழ்கடல் முத்து போலமதிப்பு, அரிய பொருள்
11ஆழ்ந்த கடலுக்குள் புதைந்து கிடக்கும் முத்து போலமறைந்து கிடக்கும் அரிய பொருள்
12ஆழ்ந்தகுளம் தன் ஆழத்தைக் காட்டாமல் அமைதியாய் இருப்பது போலஅடக்கம்
13ஆற்றைத் தாண்ட முடியாதவன் ஆழியைத் தாண்ட முயன்றாற் போலவீண் முயற்சி
14ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போலஅழிவு
15ஆனை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போலதனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்ளுதல்
16இஞ்சி தின்ற குரங்கு போலஎரிச்சல், விழித்தல், வேதனை
17இடியோசை கேட்ட நாகம் போலஅச்சம், நடுக்கம், பயம், மயக்கம், மிரட்சி, மருட்சி, சீற்றம், கலக்கம்
18இடியோசை கேட்ட மயில் போலஅச்சம், பயம், மயக்கம், மருட்சி
19இடி விழுந்த மரம் போலஅழிதல், பெருந்துன்பம், மீளாத் துயர், வேதனை
20இருதலைக் கொள்ளி எறும்பு போலதவிப்பு
21இரும்பைக் கண்ட காந்தம் போல / இரும்பை இழுக்கும் காந்தம் போலஈர்ப்பு, கவர்ச்சி
22இலை மறை காய் போலகுறிப்பால் உணர்த்தல், வெளிப்படுதல், மறைபொருள்
23இலவு காத்த கிளி போலஏமாற்றம்
24இமயஞ் சேர்ந்த கருங்காக்கை பொன்னிறமடைவது போலஉயர்வு, பெருமை
25இடந்தெரியாதிருந்த புதையல் எதிர்வரப் பெற்றவர் போலமகிழ்ச்சி
26இணைபிரியா அன்றில் போலஅன்பு, பிணைப்பு



Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY