உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-6
| எண் | உவமைத் தொடர் | பொருள் |
| 1 | உண்ணுதற்கு தகுதியில்லாத வாவியில் நீர் நிரம்பியிருந்தது போல | பயனின்மை |
| 2 | உப்பிருந்த பாண்டம் போல | நிலையாமை |
| 3 | உப்பொடு நெய்பால் தயிர் காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச் சுரையின் காய் போல | மாறாத தன்மை |
| 4 | உயிரைப் பிரிந்த உடம்பு போல | தவிப்பு |
| 5 | உரிய காலத்தில் பெய்த மழை போல | தக்க தருணத்தில் உதவி |
| 6 | உருவும் நிழலும் போல | பிரியா நட்பு |
| 7 | உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல | பாசாங்கு |
| 8 | உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல | வரவரக் குறைதல் |
| 9 | உலைப் பெய்து அடுவது போல | துன்பம், வருத்தம் |
| 10 | உலைப்பட்ட மெழுகு போல | அழிவு |
| 11 | உழுந்துக் குவியலுட் புகுந்த மையுருண்டடை போல | தனித்துத் தெரிதல் |
| 12 | உறங்கி விழிப்பது போல | இறப்பும் பிறப்பும் |
| 13 | உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற்றுழியும் ஆறே போல் | எந்நேரமும் உதவி செய்தல் |
| 14 | உறை மோருக்கு இடமில்லாத வீட்டில் விலைமோருக்குப் போனாற் போல | ஆடம்பரம், வீண்பெருமை |
| 15 | ஊசியும் நூலும் போல, ஊசியும் சரடும் போல | இணைபிரியாமை, பிரியா நட்பு |
| 16 | ஊமை கண்ட கனவு போல | கூற இயலாமை, தவிப்பு |
| 17 | ஊர் எரியும் போதும் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல | பொறுப்பின்மை, அலட்சியம், சுயநலம் |
| 18 | ஊமை செய்யும் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டது போல | பயனின்மை |
| 19 | ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல | பயனற்ற விவாதம் |
| 20 | ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாதல் போல | நல்லினம் சேர்தல் |
| 21 | ஊருணி நீர் நிறைந்தாற் போல | அனைவருக்கும் பயன்படுதல் |
| 22 | ஊர்ச்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல | தொல்லை, வேதனை |
| 23 | எலியும் பூனையும் போல | பகை உணர்வு, விரோதம் |
| 24 | எள்ளினில் எண்ணெய் போல | ஒளிந்திருத்தல், மறைபொருள், மறைவு |
| 25 | எறும்பூர கல் தேய்த்தாற் போல | முயற்சி, விடாமுயற்சி |
| 26 | எள்ளுக்குள் எண்ணெய் போல | நிறைந்திருக்கும் தன்மை; ஒளிந்திருத்தல், மறைவு |
Comments
Post a Comment