தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-6
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | இட்டுக்கெட்டார் எவருமில்லை | உதவி செய்து கெட்டுப்போனவர் எவருமில்லை (தருமத்தின் அவசியம்). |
| 2 | இரக்கப் போனாலும் சிறக்கப் போ | வறுமையிற் செம்மை. |
| 3 | இரவல் சேலையை நம்பி இடுப்புக்கந்தையை எறிந்தாளாம் | இருப்பதை இழத்தல். |
| 4 | இருதலைக் கொள்ளி எறும்பு போல | தவிப்பு. |
| 5 | இருந்தகால் மூதேவி, நடந்தகால் சீதேவி | சோம்பல்; உழைப்பு. |
| 6 | இல்லாதது வராது உள்ளது போகாது | ஊழ்வினை. |
| 7 | இளஞ்சிங்கம் மத யானைக்கு அஞ்சுமா | துணிவு. |
| 8 | இளம் கன்று பயமறியாது | துணிச்சல் (வாலிபத் துணிவு). |
| 9 | இன்பமும் துன்பமும் யாருக்குமுண்டு | அளவறிந்த வாழ்வு (இயற்கையின் நியதி). |
| 10 | இன்றிருப்பார் நாளையில்லை | நிலையாமை. |
| 11 | இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை | திருப்தியற்ற மனம். |
| 12 | இளமையில் கல்வி சிலையில் எழுத்து | இளமையில் கற்பது என்றும் நிலைத்திருக்கும். |
| 13 | இறைத்த கிணறே ஊறும். இறைக்காத கிணறே நாறும் | தருமத்தின் பெருமை. |
Comments
Post a Comment