தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-10
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | கடனில்லாக் காஞ்சி கால் வயிறு போதும் | மனநிம்மதி (அமைதி நிறைந்த வாழ்வு) |
| 2 | கரும்பு தின்னக் கூலியா? | நல்ல காரியங்களுக்கு கைம்மாறு எதிர்பார்ப்பது தவறு |
| 3 | கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது | சிறியதெனினும் சிறப்புண்டு |
| 4 | கண்ட நியாயம் தான் சொல்லவேண்டும் | வாய்மை (உண்மை) |
| 5 | கழுத்திலிருப்பது ருத்ராட்சம் கையில் இருப்பது கன்னக்கோல் | வஞ்சகம் |
| 6 | கல்யாணம் செய்தும் சந்நியாசியா? | ஏமாற்றம் |
| 7 | கழுதை தேய்ந்து கட்டெறும்பானது | மதிப்பிழத்தல் |
| 8 | கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? | தகுதிக்கு மேலே எண்ணுதல் |
| 9 | கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன? | பயனின்மை |
| 10 | குணமுயர்ந்தாலும் கசப்பு கட்டு | தூய்மையாக இருத்தல், வறுமையிலும் செம்மை |
| 11 | கந்தையானாலும் கசக்கி கட்டு | தூய்மையாக இருத்தல், வறுமையில் செம்மை |
| 12 | கட்டை இருக்கிற மட்டும் கஷடமுண்டு | வாழ்க்கையின் அங்கம் துக்கம் |
| 13 | காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு | பாச உணர்வு |
| 14 | காணி ஆசை கோடி கேடு | சிறியது பெரியவற்றைக் கெடுக்கும் |
Comments
Post a Comment