தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-7

 

எண்பழமொழிவிளக்கம்
1உடையவன் பாராப்பயிர் உருப்படுமா?பயனற்றது / சரியான கவனிப்பு இல்லாமை
2உண்கிற சோற்றில் நஞ்சைக் கலக்கலாமா?வஞ்சகம்
3உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினையாதேநன்றி மறவாமை
4உண்ணார்ச் சொத்து மண்ணாய்ப் போகும்கஞ்சத்தனம் கூடாது
5உதட்டிலே உறவும் நெஞ்சிலே பகையும்பாசாங்கு (பொய்யான நடிப்பு)
6உப்பிட்டவரை உள்ளளவும் நினைநன்றி
7உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடிதிண்டாட்டம்
8உழுகிற நாளில் ஊருக்குப் போய் அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போலசோம்பல்
9உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுகிறேன் தற்புகழ்ச்சி 
10உள்ளத்தைச் சொன்னால் உடம்பு எரிச்சல் எடுக்கும்உண்மை வலிக்கும் 
11உள்ளத்தைச் சொன்னால் ஊருக்குப் பகைஉண்மை வலிக்கும் 
12உறங்கின நரிக்கு உணவு கிடைக்காது உழைப்பு
13உறவு  போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டதுஉபயோகமின்மை 
14உறியிலே வெண்ணெயிருக்க நெய்க்கு அலைவானேன்?வைத்துக்கொண்டு தேடல்
15உன் வாயிலே மண் விழசாபம்
16உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை உரியவன் இல்லாக் கருமம் குறைப்படல் 
17உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?தகுதிக்கு மேலே எண்ணாதே
18உறியில் நெய் இருக்க ஊரெல்லாம் நெய்க்கு அலைவானேன்?வேண்டியதைத் தன்னிடமே வைத்துக்கொண்டு பிறரிடம் வேண்டல் 

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY