தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-8
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | ஊசி போகுமிடம் பார்ப்பார் உலக்கை, போகுமிடம் பாரார் | சிறிய விடயங்களில் கவனம் செலுத்துதல், பெரிய விடயங்களில் கவனமின்றி இருத்தல் |
| 2 | ஊத்தைப் போனாலும் ஊழ்வினை போகாது | ஊழ்வினை |
| 3 | ஊரோடு ஒட்டி வாழ் | ஒத்துப் போதல் |
| 4 | ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் | பிறர் துன்பத்தில் மகிழ்வடைதல் |
| 5 | ஊர் ஓட ஓடு | ஒத்துப் போதல் |
| 6 | ஊன் அற்றபோதே உறவு அற்றது | வறுமை |
| 7 | எங்கே புகை உண்டோ அங்கே நெருப்புண்டு | காரண காரியம் (எந்தவொரு நிகழ்வுக்கும் அல்லது விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கும்.) |
| 8 | எச்சில் கையால் காக்கா ஓட்டமாட்டான் | கஞ்சத்தனம் |
| 9 | எட்டி பழுத்ததென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன? | ஈகையின் அவசியம் |
| 10 | எட்டினால் குடுமியைப் பிடி எட்டாவிட்டால் காலைப் பிடி | பாசாங்கு |
| 11 | எலி அழுதால் பூனை விடுமா? | எந்தப் பலனும் இல்லை |
| 12 | எலியும் பூனையும் போல | பகைமை |
| 13 | எழுதிய எழுத்தை ஈசனாலும் மாற்ற முடியாது | விதி |
| 14 | எழுதிய விதியை யாராலும் மாற்ற முடியாது | ஊழ்வினை |
| 15 | எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி | வறுமை |
| 16 | எனக்கு எதிரி இல்லை நெல்லுக்குப் பதரில்லை | தற்புகழ்ச்சி |
| 17 | எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு | வீண் பெருமை |
| 18 | எய்தவன் இருக்க அம்பை நோவானேன் | தப்பபிப்ராயம் (தவறான புரிதல்) |
| 19 | எலி வளையானாலும் தனி வளை வேண்டும் | உடைமை, சொந்தம், உரிமை |
Comments
Post a Comment