உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-5
| எண் | உவமைத் தொடர் | பொருள் |
| 1 | இணை பிரிந்த அன்றில் போல | உயிர்வாழாமை, துக்கம் |
| 2 | இடி இடித்து மழை ஓய்ந்தது போல | அமைதி |
| 3 | இடிகரைப் பெரு மரம் போல | உறுதி |
| 4 | இடித்த புளி போல | பயனற்ற தன்மை |
| 5 | இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப் புற்கரிக்காதது போல | கொள்கை உறுதி; சான்றாண்மை |
| 6 | இரண்டு கண்ணுமில்லாதவனை நல்லகண்ணன் என்பது போல | போலிப் புகழ்ச்சி |
| 7 | இருநாய்க் கிட்ட எலும்பு போல | தவிப்பு |
| 8 | இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல | வலிமை |
| 9 | இரும்புங் காந்தமும் பொருந்துந் தன்மை போல | இயற்கையாகவே இணைதல் |
| 10 | இரும்புத் தூணை எறும்பு அரித்தாற் போல | முயற்சி |
| 11 | இழந்த பொருள் எதிர்வரப் பெற்றவர் போல | பெருமகிழ்ச்சி |
| 12 | இழிந்தவை காமுறும் ஈப்போல | அறிவின்மை |
| 13 | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் போல | உறுதுணை, உதவி |
| 14 | இளஞாயிறு போல | இளமை, புத்துணர்ச்சி |
| 15 | இனம் இனத்தை நாடுமாப் போல | ஒத்த எண்ணங்கள் |
| 16 | இனம் பிரிந்த மான் போல | தனிமை, பிரிவுத்துயர் |
| 17 | ஈன்றோள் நீத்த குழவி போல | வருத்தம், துயரம் |
| 18 | உடலும் உயிரும் போல | ஒற்றுமை, நெருக்கம் |
| 19 | உடுக்கை இழந்தவன் கை போல | நட்பு, விரைவு |
| 20 | உடும்புப் பிடி போல | உறுதி, பிடிப்பு, பிடிவாதம் |
| 21 | உமி குற்றிக் கை வருந்தினாற் போல | அறியாத்தனம், பயனின்மை, வருத்தம், வேதனை |
| 22 | உமையும் சிவனும் போல | நெருக்கம், நட்பு |
| 23 | உள்ளங்கை நெல்லிக்கனி போல | வெளிப்படைத்தன்மை, தெளிவு |
| 24 | உட்சுவர் இருக்கப் புறஞ்சுவர் பூசுவார் போல | பயனற்ற செயல் |
| 25 | உயிரும் உடம்பும் போல | பிரியா நட்பு, ஒற்றுமை, நெருக்கம் |
| 26 | உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல (உகிர்ச்சுற்று - நகச்சுற்று) | பெருந்துயரம் |
| 27 | உலக்கைக் கொழுந்து போல | அறிவுக்குறை |
| 28 | உள்ளீடற்ற பதர் போல, உள்ளீடில்லாப் பதர் போல | போலி, பயனின்மை |
| 29 | உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல | உறுதி |
Comments
Post a Comment