உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-3

 

எண்உவமைத் தொடர்பொருள்
1அழன் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம் நிழல்மரம் போலதன்னை வருத்திப் பிறர் வாழத் தான் வாழ்வது
2அழுகுரலோசை கேட்ட அந்தணர் போலகவலைப்படுதல்
3அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலஇன்றியமையாதது
4அளிந்த புண்ணில் அம்பு பட்டது போலவலியை மேலும் அதிகப்படுத்தல்
5அறத்தாற்றின் வழங்காதான் ஆக்கம்போலபயனற்றது
6அறிதோறும் அறியாமை கண்டற்றுஅறியாமையை உணர்தல்
7அறுகியற்றூசல் போலவீழ்ச்சி
8அறுத்த கோழி துடிக்குமாப் போலவேதனை
9அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போலதுன்பத்தில் விலகுதல்; பொய்யான உறவு
10அற்ற குளத்துக் கொட்டியும் ஆம்பலும் போலதுன்பத்திலும் உடன் இருத்தல்; உண்மை உறவு
11அனலில் விழுந்த புழுப்போலவேதனை
12அன்றலர்ந்த மலர் போலபுத்துணர்வு
13அன்றிலும் பேடும் போலஒற்றுமை; இணைபிரியாமை
14ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல / ஆப்பசைத்த குரங்கு போலஅறியாமை, வேதனை
15ஆண்டிகள் கூடி மடங்கட்டினது போலவெற்றுப்பேச்சு; உருவாகாத திட்டம்
16ஆயிரங்காலத்துப் பயிர்ப் போலநீண்ட வாழ்வு, பழைமை
17ஆறிடும் மேடும் மடுவும் போலஉயர்வு தாழ்வு; செல்வத்தின் நிலையாமை
18ஆற்றில் கரைத்த புளி போலபயனற்ற செயல், வீண்விரயம்
19ஆகாயத்திற் கட்டிய கோட்டை போலகற்பனை, சாத்தியமற்றது; முடியாத ஒன்றைக் கற்பனைச் செய்தல்
20ஆடி ஓய்ந்த பம்பரம் போலஓய்ந்து போதல், சோர்வு
21ஆலம் வித்துப் போலமிகச்சிறியதாயினும், பெரும்பயன் (மிகு பயன்)
22ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போலகுழப்பம், உறுதி இல்லாத தடுமாற்றம்
23ஆற்றிற் பறிகொடுத்துக் குளத்தினில் தேடியதைப் போலமுட்டாள்தனம்; பயனற்ற செயல் (பயனின்மை)
24ஆனை வாயிலே போன கரும்பு போலஅழிவு, நடுக்கம், நாசம், போதாமை
25ஆடு நுனிப்புல் மேய்வதைப் போலமேலோட்டமாகச் செய்தல்
26ஆடிக் காற்றில் உதிரும் சருகுபோலஎளிதில் வீழ்தல்
27ஆடு குழை தின்றாற் போலமேலோட்டமாகச் செய்தல், அரைகுறையாகச் செய்தல்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY