தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-5
| எண் | பழமொழி | விளக்கம் |
| 1 | ஆடத்தெரியாத கூத்தாடி மேடை கோணல் என்றானாம் | குறை கூறுதல். |
| 2 | ஆடத்தெரியாதவன் அரங்கு கோணலென்றானாம் | குறை கூறுதல். |
| 3 | ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது | போலி இரக்கம். |
| 4 | ஆட்டுக்குட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு தேடினாற்போல | வைத்துக்கொண்டு தேடல். |
| 5 | ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு | பதட்டம் தேவையற்றது. |
| 6 | ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை | அற்பனுக்கு மதிப்பு. |
| 7 | ஆழ அமுக்கினாலும் நாழி முகவாது | கொள்ளக்கூடிய அளவே கொள்ளும். |
| 8 | ஆழமறியாது காலை விடாதே | எதையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும். |
| 9 | ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் | இரண்டிலும் நாட்டம். |
| 10 | ஆற்றுவாருமில்லை தேற்றுவாருமில்லை | தனிமை, ஆதரவின்மை. |
| 11 | ஆனை அரசாண்ட இடத்தில் பூனை புலம்பி அழுகிறது | நொந்துபோதல். |
| 12 | ஆனைக்கும் அடி சறுக்கும் | பெரியவர்களுக்கும் தவறு ஏற்படலாம். |
| 13 | ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் | காலம் மாறலாம். |
Comments
Post a Comment