உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-2
| எண் | உவமைத் தொடர் | பொருள் |
| 1 | அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல | திருப்தி அடைதல் |
| 2 | அகலாதணுகாது தீக்காய்வர் போல | அளவோடு பழகுதல் |
| 3 | அங்கணத்துள் உக்க அமிழ்தம் போல | பயனற்றது |
| 4 | அசோகவனத்துச் சீதை போல | தனிமை, துன்பம் |
| 5 | அடிப்பட்ட பந்து போல | சோர்ந்து போதல் |
| 6 | அடிமரம் போல | உறுதி |
| 7 | அடியிலிருந்து கரும்பு தின்பது போல | இன்பம் குறைதல் |
| 8 | அடிவயிற்றில் இடி விழுந்தது போல | கொடுந்துன்பம் |
| 9 | அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவது போல | பதற்றம், பயம் |
| 10 | அடுங்காலை நீர் கொண்ட வெப்பம் போல | தானாகவே தணிதல் (சான்றோரின் கோபம் விரைவில் தணிந்துவிடும்) |
| 11 | அடை காத்த கோழி போல | பாதுகாப்பு |
| 12 | அனுமார் இலங்கையில் சீதையைத் தேடினது போல | தடைகளைக் கடத்தல் |
| 13 | அந்திக் காலத்துத் தாமரை போல | வாட்டம் |
| 14 | அம்பேறுண்ட மயில் போல | வேதனை |
| 15 | அம்பு பட்ட மான் போல | உயிர்த்துடிப்பு |
| 16 | அம்மி துணையாக ஆறு இறங்கியது போல | அழிவு |
| 17 | அரங்கின்றி வட்டாடியது போல | அறியாமையான செயல் |
| 18 | அரம் பொருத பொன் போல | குறைதல், அழிவு |
| 19 | அரிசி அள்ளுகிற காகம் போல | கிடைத்ததை உடனே பயன்படுத்துவது |
| 20 | அருஞ்சுரத்தின் மரம் போல | துன்பத்தில் இருப்பவருக்கு உதவுதல் |
| 21 | அலைபுனலுள் இருப்பினும் தாமரை ஈன்ற இலையின் கண் நீர்நில்லாதது போல | கட்டுப்பாடு |
| 22 | அல்லித் தண்டு போல | நிலையற்ற தன்மை, வலிமையின்மை |
| 23 | அழகெலாந் திரண்ட பசும்பொற் பாவை போல | பொலிவு |
| 24 | அழலருகே சேர்ந்த மலர் போல | அழிவு |
Comments
Post a Comment