உவமைத் தொடர்கள்-விளக்கம்-தொகுப்பு-1

 

எண்உவமைத் தொடர்பொருள்
1அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலசகிப்புத்தன்மை, பொறுமை
2அகலக்கடை வாய் போலஅலைந்து திரிதல்
3அச்சாணியற்ற தேர் போல / அச்சாணி இல்லாத தேர் போலஉயிர் நாடியற்றது, சரியான வழிகாட்டி இல்லாமை, தடுமாறுதல்
4அச்சில் வார்த்தாற்போலஒரே சீராக
5அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருவது போலவிடாமுயற்சி
6அடியற்ற மரம்போலவீழ்தல், பெருந்துன்பம், மூலபலமற்றது, வலுவின்மை
7அடுத்தது காட்டும் பளிங்குபோலஉள்ளத்தைப் பிரதிபலித்தல், வெளிப்படுத்துதல், உள்ளொன்று வெளியொன்று இல்லாமை, தெளிவு
8அணை கடந்த வெள்ளம் போலதிரும்ப வராது
9அத்தி பூத்தாற் போல / அத்தி பூத்தது போலஅரிய நிகழ்வு, மிக அரிதாக, அரிய செயல்
10அரியினோடு அரியினம்  மோதுவது போலஒத்த வலிமை 
11அரைக் கிணறு தாண்டியவன் போலஆபத்து, பயனின்மை
12அலை இல்லாத கடல் போலஅமைதி
13அலை ஓய்ந்த கடல் போலஅமைதி
14அலைவாயில் அகப்பட்ட துரும்பு போலஅலைதல், சிக்கித் தவித்தல்
15அலையில் சிக்குண்ட துரும்பு போலதுன்பம்
16அவசரக் குடுக்கை போலஅவசரம், பதற்றம்
17அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போலஆத்திரம்; பொறுமையின்மை, நிதானமாகச் செய்யவேண்டிய செயலை அவசரமாகச் செய்வது
18அவலை  நினைத்து   உரலை இடித்தாற் போலஒன்றை எண்ணி வேறொன்று செய்தல், தடுமாற்றம்
19அழகுக்கு அழகு செய்வது போலபெருமைக்குப் சேர்த்தல் பெருமை
20அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் போல / அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவது போலஏமாற்றுதல்
21அனலில் இட்ட மெழுகு போலதுன்பம், உருகுதல், துடிதுடித்தல்
22அனலில் படும் நெய் போலவருத்தம், துன்பம்
23அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற்போலதடுமாற்றம், புதிதாய் ஒன்று செய்யத் துவங்கி இருப்பதையும் இழப்பது.
24அன்னம் இருந்த மென்மலரைப் புன்காகம் கொள்ளப் போனாற் போலஉயர்ந்தோர்கள் இருந்த வளமான இடத்திற்குத் தீயோர்கள் வருதல்
25அன்னம் போன்ற நடைஅழகு, பொறுமை, மென்மை



Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY