காந்திய கால கட்டம் - முக்கியமான ஆண்டுகள்-நிகழ்வுகள்
| ஆண்டு | நிகழ்வு |
| 1915 (ஜனவரி 9) | காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். |
| 1917 | சம்பிரான் சத்தியாகிரகம் (இந்தியாவில் காந்தியின் முதல் போராட்டம்). |
| 1918 | அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் மற்றும் கேடா சத்தியாகிரகம். |
| 1919 | ரௌலட் சட்டம் (கருப்புச் சட்டம்) இயற்றப்பட்டது. |
| 1919 (ஏப்ரல் 13) | ஜாலியன் வாலாபாக் படுகொலை. |
| 1919 | கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது. |
| 1920 | ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. |
| 1922 (பிப்ரவரி 5) | சௌரி சௌரா சம்பவம் (ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது). |
| 1923 (ஜனவரி 1) | சுயராஜ்யக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது (சி.ஆர்.தாஸ் & மோதிலால் நேரு). |
| 1927 | சைமன் குழு நியமிக்கப்பட்டது. |
| 1928 | நேரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. |
| 1929 (டிசம்பர்) | லாகூர் காங்கிரஸ் மாநாடு (பூரண சுயராஜ்யம் தீர்மானம்). |
| 1930 (ஜனவரி 26) | முதல் விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. |
| 1930 (மார்ச் 12) | தண்டி யாத்திரை / உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது. |
| 1930 | முதல் வட்டமேசை மாநாடு. |
| 1931 (மார்ச் 5) | காந்தி - இர்வின் ஒப்பந்தம். |
| 1931 | இரண்டாம் வட்டமேசை மாநாடு (காந்தி கலந்து கொண்டார்). |
| 1932 | மூன்றாவது வட்டமேசை மாநாடு. |
| 1932 (செப்டம்பர்) | பூனா ஒப்பந்தம் (காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே). |
| 1935 | இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. |
| 1937 | மாகாணங்களில் முதன்முதலில் பொதுத்தேர்தல் நடந்தது. |
| 1940 (அக்டோபர்) | தனிநபர் சத்தியாகிரகம் (வினோபா பாவே தொடங்கினார்). |
| 1942 | கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை. |
| 1942 (ஆகஸ்ட் 8) | வெள்ளையனே வெளியேறு இயக்கம் (செய் அல்லது செத்து மடி). |
| 1945 | வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு. |
| 1946 | அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) வருகை. |
| 1947 (ஆகஸ்ட் 15) | இந்தியா விடுதலை அடைந்தது. |
Comments
Post a Comment