OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-9

 1. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய ராட்சத பூனை வரைபடம் பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எனும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமுள்ள இந்த பூனை வரைபடம் கிமு 500 முதல் கிபி 200 வரையிலான காலத்தைச் சேர்ந்தது.

2. முதலாவது மெய்நிகர் ஜி 20 (G20 (Group of Twenty)) - இளைஞர் 20 உச்சிமாநாடு (Youth 20 (Y20) Summit) 15-17 அக்டோபர் 2020 தினங்களில் சவூதி அரேபியா நாட்டினால் இணைய வழியில் நடைபெற்றது. 

3. தேசிய அடையாள தரவுத்தளத்தில் முக சரிபார்ப்பை (Facial verification in National Identification Database) இணைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது.

4. நியூசிலாந்தின் பிரதமராக, அந்நாட்டின் தொழிற்கட்சியின் (Labour Party) தலைவர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

5. கரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகா செப்ராலு வெற்றி பெற்றுள்ளார்.

6. இந்திய வங்கிகள் சங்கத்தின் (Indian Banks’ Association (IBA)) தலைவராக, யூனியன் ஃபாங்க் ஆப் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஜி. ராஜ்கிரண் ராய் (G Rajkiran Rai) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7. 2020-ம் ஆண்டின் அரசியல், பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது : 

  • குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதி மற்றும் 
  • மனித உரிமைப் போராளி ஹர்ஷ் மாந்தர் தலைமையில் செயல்படும் காரவானே முஹப்பத் (அன்பிற்கான ஊர்தி) என்ற அமைப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
7. "என் தோழி’ என்ற பெயரில் இரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பு தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினால் தொடங்கப்பட்டுள்ளது.

8. "கிசான் சூரியோதய யோஜனா” (Kisan Suryodaya Yojana) என்ற பெயரில், விவசாயிகளுக்கு 16 மணிநேர மின்சாரம் வழங்குவதற்கான குஜராத் மாநில அரசின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 24-10-2020 அன்று தொடங்கி வைத்தார். 
  • இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.
9. சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா, 5-வது இடத்துக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

10. "பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தினை" ( Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) சிறப்பாக செயல்படுத்திய தேசிய அளவிலான 30 மாவட்டங்களின் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டம் (Mandi district ) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

===========================================

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்