OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-7
1.”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” (“Ayushman Sahakar” ) : கேரள மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை (cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு, ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” என்ற பெயரில், இந்தியா முழுவதும் கூட்டுறவு சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 18-10-2020 அன்றூ தொடங்கியுள்ளது.
- இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் (National Cooperative Development Corporation (NCDC)) மூலம் ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
2.காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு (Kaleshwaram lift irrigation project) தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal ) சுற்றுசூழல் ஒப்புதலை வழங்கியுள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் அமையவுள்ள இந்த திட்டமானது கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது.
3.இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை குஜராத் மாநிலத்திலுள்ள ஆமதாபாத்தில் 31-10-2020 அன்று தொடங்கப்படவுள்ளது .
- இதன் மூலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை (Statue of Unity) செல்வதற்கான கடல் விமான சேவை வழங்கப்படுகிறது.
4.உலகின் மிகப்பெரிய துத்தநாக உருக்காலை திட்டம் (World biggest Zinc Smelter Project) குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது.
- இத்திட்டத்தில் இந்துஸ்தான் சிங் லிமிடட் நிறுவனம் (The Hindustan Zinc Limited ) ரூ.10,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
- முதல் மூன்று இடங்கள்=அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான்
- அடுத்தடுத்த இடஙளை முறையே கேரளா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை பெற்றுள்ளதாகவும் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவர அறிக்கையில்’ (Indian Tourist Statistics) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thank you sittr
ReplyDeleteIs America is Asian country
ReplyDelete