OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-8

1. 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை மாறுகொழுப்பு (Trans Fat) பயன்பாடற்ற நாடாக மாற்றுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்குள் மாறுகொழுப்பை (Trans Fat) ஒழிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2.”மூபே” (‘MooPay) என்ற பெயரில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான முதலாவது தானியங்கி மின்னணு பணப்பரிமாற்ற செயலியை ’ஸ்டெல்லாப்ஸ்’ (Stellapps) எனப்படும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடனான தொழில் முனைவு நிறுவனம் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

3. ”சாண்ட் ஏவுகணை” (”SANT Missile -Standoff Anti-Tank Guided Missile”) எனப்படும் வானிலிருந்து 15கி.மீ. முதல் 20 கி.மீ. வரையிலான நிலத்திலுள்ள எதிரிகளின் இலக்கினைத் தாக்க வல்ல ஏவுகணையினை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) 19-10-2020 அன்று ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

4.இந்தியாவின் முதல் “பல்நோக்கு நவீன தளவாடங்கள் பூங்காவை” (Multi-modal Logistic Park) அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோகிகாபோ-வில் (Jogighopa) அமைப்பதற்கு 20-10-2020 அன்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

5.இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரசார செலவுத் தொகையை 10 சதவிகிதமாக உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • மாநிலத்திற்கு மாநிலம் செலவினத் தொகை மாறுபடும். தமிழகத்தைப் பொருத்தவரையில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.
6.சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் 2020 ல் (Global Hunger Index 2020) இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.

7. ”ஸ்லினெக்ஸ் -20” (SLINEX-20) என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கிடையேயான எட்டாவது வருடாந்த இருதரப்பு கடல்சார் பயிற்சி இலங்கையின் திருகோணமலையில் 19 - 21 அக்டோபர் 2020 வரையில் நடைபெற்றது.

8.சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் அவையின் மூன்றாவது கூடுகை (Assembly of the International Solar Alliance) 14-16 அக்டோபர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெற்றது . இக்கூடுகையின் போது, சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் பின்வரும் விருதுகள் (ISA Solar Awards ) வழங்கப்பட்டன.

  • கல்பனா சாவ்லா விருது (Kalpana Chawla Award) - பீம் சிங் (Dr. Bhim Singh), ஐ.ஐ.டி, தில்லி மற்றும் ஆயிஷா அல்னாய்மி ( Dr. Aaesha Alnuaimi ), துபாய்
  • விஷ்வஸ்வராயா விருது (visvesvaraya Award) - மகேந்திர ஜெயின் (Mahendra Jain) , கர்நாடகா
  • திவாகர் விருது (Diwakar Award) - அர்பான் நிறுவனம் (Arpan Institute) , ஹரியானா மற்றும் ஆருஷி சொசைட்டி (Arushi Society) , மத்திய பிரதேசம் (Haryana) and (Madhya Pradesh)
9.சர்வதேச நாணைய நிதியத்தின் ( International Monetary Fund (IMF)) 190 வது உறுப்பினராக ஆண்டோரா (Andorra) 16-10-2020 அன்று இணைந்துள்ளது.

10.வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO - North Atlantic Treaty organisation) புதிய விண்வெளி மையம் (Space Centre) ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் (Ramstein) அமைக்கப்படவுள்ளது.

==========================================

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்