OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-6

 1.“ஸ்வாமித்வா” (SVAMITVA -Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின் கீழ் , சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து காணொலி வழியாக 11-10-2020 அன்று தொடக்கி வைத்தாா். 

  • கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.

2.”இந்தியா சாட்” (India Sat) என்ற பெயரில் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்  உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஷாவின் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை ,கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த அத்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

  •  முன்னதாக, 2017-ம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்சாட் (Kalamsaat)’ எனும் செயற்கைக்கோளை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3.2020-2021 ஆம் நிதியாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி  (gross domestic product (GDP) யின் வளர்ச்சியானது -10.3% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) , தனது ’உலக பொருளாதாரப் பார்வை’ (World Economic Outlook) அறிக்கையில் கணித்துள்ளது.

4.கபிலா” (‘KAPILA’ Kalam Program for IP Literacy) என்ற பெயரில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு பரப்புரையை (Intellectual Property (IP) Literacy and Awareness campaign) அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான 15-10-2020 அன்று மத்திய அரசு தொடங்கியுள்ளது. 
  • இதன் ஒருபகுதியா 15-23 அக்டோபர் 2020 தினங்கள் அறிவுசார் சொத்துரிமை வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
5.காருண்யா சுகாதார காப்பீட்டு திட்டம் (Karunya Arogya Suraksha Pathadi - KASP) : கேரளாவில் பொது மக்களுக்குச் சிகிச்சையளிக்க, மருத்துவ நிதி உதவி வழங்கிட மாநில அரசு காருண்யா சுகாதார காப்பீட்டு திட்டம் (Karunya Arogya Suraksha Pathadi - KASP) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 
  • 2018 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரையில் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.
6.இ-வேஸ்ட் எனப்படும் மின்பொருள் (எலக்ட்ரானிக்) கழிவுகளை அதிகமாக உருவாக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம் பெற்றுள்ளது.

7.”சரல் ஜீவன் பீமா” ( ‘Saral Jeevan Bima’) என்ற பெயரில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்குமான கட்டாய காப்பீட்டு சேவையை 1 ஜனவரி 2021 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கான வழிமுறைகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) வெளியிட்டுள்ளது.

8.”பெபிகொலம்போ விண்வெளி கலம்” (BepiColombo Space Craft) என்பது புதன் ( Mercury ) கிரகத்தை ஆராய ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேசன் ஏஜன்ஸி (Japan Aerospace Exploration Agency) மற்றும் “ஐரோப்பிய விண்வெளி முகமை” (European Space Agency) ஆகியவற்றால் இணைந்து அனுப்பப்படும் விண்கலமாகும். 
  • 2025 ஆம் ஆண்டில் புதன் கிரகத்தை சென்றடையும், இந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் மூலம், Mercury Planetary Orbiter மற்றும் Mercury Magentospheric Orbiter என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
9.இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞர் கலையரசனுக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது .

10.மேகாலய மாநிலத்தில் கிராமப்புற மக்களின் வசதிக்காக அவா்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் ‘மைக்ரோ ஏடிஎம்’ சேவையை அம்மாநில முதல்வா் தொடங்கிவைத்தாா்.

=============================================

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்